Vimarsana.com

tamil movie latest news: Live & Latest News Updates : Vimarsana.com

தங்கையின் திருமணத்துக்காக பெங்களூரு வந்த ஐஸ்வர்யா ராய் - Aishwarya rai came to banglore for her sister wedding

தங்கையின் திருமணத்துக்காக பெங்களூரு வந்த ஐஸ்வர்யா ராய் 17 மார், 2021 - 11:58 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, உலக அழகியாக மாறிய ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் நுழைந்து, அப்படியே பெரிய குடும்பத்தின் மருமகளாகவும் மாறினார். இதை தொடர்ந்து பெங்களூருவுக்கு அவர் எப்போதாவது ஒருமுறை வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதேசமயம் குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் அவர் மிஸ் பண்ணுவதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனது தங்கையின் திருமண நிகழ்வுக்காக பெங்களூருவுக்கு கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆரத்யாவுடன் வந்திருந்தார். மணமகள் ஸ்லோகா, ஐஸ்வர்யா ராயின் சித்தி மகளாவார். பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியின்போது, அங்கே வந்திருந்த அனைவரிடமும் சகஜமாக கலந்து பழகி ஆச்சர்யப்படுத்திய ஐஸ்வர்யா ராய், மணமக்களுடன் மேடையிலும் நடனம் ஆடி விருந்தினர்களை வியப்படைய வைத்தாராம். . Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Aishwarya-rai
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news
Tamil-actors-gallery
Tamil-actress-gallery
Tamil-actor-wallpapers
Tamil-actress-wallpapers

மறக்க முடியுமா? - தம்பி - Marakkamudiyuma : Thambi

மறக்க முடியுமா? - தம்பி 15 மார், 2021 - 16:49 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : தம்பி வெளியான ஆண்டு : 2006 நடிகர்கள் : மாதவன், பூஜா, வடிவேலு, இளவரசு இயக்குனர் : சீமான் தயாரிப்பு : டாக்டர் முரளி மனோகர் 'உபதேசம் பண்ணா எவன் கேக்கிறான்? உதைச்சாத் தான் கேக்கிறான்' என, விழிகளை உருட்டியபடியே மாதவன் மிரட்டிய படம், தம்பி. கடந்த, 1996ல், பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும், 2006ல் வெளியான, தம்பி படத்தின் வழியாகவே, அதிக கவனம் பெற்றார், சீமான். தமிழ் சினிமாவின், 'சாக்லேட் பாய்' நாயகனாக இருந்த மாதவன், ரன் படத்தின் மூலம் ஆக் ஷன் பாதைக்கு திரும்பினாலும், முழுமையான அதிரடி நாயகனாக மாறியது, தம்பி படத்தில் தான். இப்படத்தில், கண்களை இமைக்காமல் நடித்தார்! தமிழ் நடிகர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க முன்வராததால், மாதவன் நடித்தார். 'என்ன நடக்குது இங்கே?' என, மாதவன் கேட்கும்போதெல்லாம், நமக்கும் சூடு பரவுகிறது. படத்தின் பலமே, வசனங்கள் தான். 'இங்கே, 'சைலன்ஸ்' என்பதையே, சத்தமாகத் தானே கூற வேண்டி உள்ளது. ஆயுதம் வாங்குற பணத்திற்கு அரிசி வாங்கியிருந்தால், இவ்வுலகத்தில் பசி இருந்திருக்காது...' உள்ளிட்ட வசனங்கள் கைத்தட்டல் பெற்றன. படத்தில், பெரும்பாலும் ஆங்கில கலப்பின்றி, தமிழில் வசனம் இடம் பெற்றிருந்ததும், பாராட்டுகளை பெற்றது. தன் குடும்பத்தை அழித்த ரவுடிகளை பழிக்கு பழி வாங்காமல், அவர்களை திருத்த, அடிதடியை கையில் எடுக்கும் கதாநாயகன். இது தான், கதை. மலையாள நடிகர் பிஜு மேனன் வில்லனாக நடித்திருந்தார். பாடல்களிலும் சமூகக் கருத்துகள் பரவியிருந்தன. 'சுடும் நிலவு, பூவனத்தில், என்னம்மா தேவி ஜக்கம்மா...' பாடல்கள் ரசிக்க வைத்தன. கார்த்தி நடிப்பில், தம்பி என்ற பெயரில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது; தமிழில் தலைப்புக்கும் பஞ்சமா? பேரன்பும், பெருங்கோபமும் உடையவன், சீமானின் தம்பி! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Thambi
Madhavan
Seeman
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news
Tamil-actors-gallery
Tamil-actress-gallery

மறக்க முடியுமா? - வரலாறு - Marakkamudiyuma : Varalaru

மறக்க முடியுமா? - வரலாறு 15 மார், 2021 - 16:56 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : வரலாறு வெளியான ஆண்டு : 2006 நடிகர்கள் : அஜித், அசின், கனிகா இயக்கம் : கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பு : நிக் ஆர்ட்ஸ் அஜித் மூன்று வேடங்களில் நடித்த படம், வரலாறு. இப்படம் வெளியாவதற்குள், எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்தது. படம் வெளியானதே, ஒரு சாதனை தான். கடந்த, 1999ல் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், 'காட்பாதர்' என்ற தலைப்பில், கமலுக்கு ஒரு கதையை தயார் செய்தார். அவர் நடிக்க இயலவில்லை. ரஜினிக்கு அக்கதை பிடித்திருந்தாலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட, ஜக்குபாய் படத்தில் நடிக்க துவங்கினார். அப்படத்தின் இயக்குனர், கே.எஸ்.ரவிகுமார் தான். ஆனால், சில காரணங்களால், ஜக்குபாய் படமும், 'டிராப்' செய்யப்பட்டது. இதற்கு இடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பதாக இருந்த, மிரட்டல் படமும் கைவிடப்பட்டது. இதனால் அஜித், காட்பாதர் படத்தில் இணைந்தார். 2004ல் படப்பிடிப்பு துவங்கியது. பட்ஜெட், கால்ஷீட் என, பல்வேறு பிரச்னையில் சிக்கியபடி, மெல்ல வளர்ந்தது படம். இப்படத்தில் நடித்த காலத்தில், பாலாவின் நான் கடவுள் பட வாய்ப்பு, அஜித்திற்கு வந்தது. அதனாலும், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. படத்தில் இருந்து, ஜோதிகா விலகியதை அடுத்து, அசின் நாயகியாக நடித்தார். தந்தை அஜித்தின் மனைவி கதாபாத்திரத்தில், மீனா, தேவயானி, சிம்ரன் என, 'ரவுண்ட்' சென்று, இறுதியில், கனிகா நடித்தார். பி.சி.ஸ்ரீராம், ப்ரியன் என, ஒளிப்பதிவாளர்களும் மாறினர். இதற்கு இடையில், அஜித் உடல் இளைத்திருந்தார். இதனால் படத்தில், அஜித்தின் உடலில் மாற்றம் தெரியும். வரி விலக்கு காரணமாக, படத்தின் தலைப்பு, வரலாறு என, மாறியது. இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் வெளியான வரலாறு, பெரும் வெற்றி பெற்றது. அதிலும் பரத கலைஞராக நடித்து, அஜித் ஆச்சரியப்படுத்தினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன. வரலாறு படைப்பது சாதாரணம் அல்ல! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Varalaru
Ajith-kumar
Asin
Ksravikumar
Ar-rahman
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news

மறக்க முடியுமா? - சில்லுனு ஒரு காதல் - Marakka Mudiyuma : Sillunu Oru Kadhal

மறக்க முடியுமா? - சில்லுனு ஒரு காதல் 12 மார், 2021 - 15:21 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : சில்லுனு ஒரு காதல் வெளியான ஆண்டு : 2006 நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் இயக்கம் : என்.கிருஷ்ணா தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன் சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியான படம், சில்லுனு ஒரு காதல். 'ஜில்லுனு' என்ற வார்த்தை வரிவிலக்கிற்காக, 'சில்லுனு' என மாறியது. கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணா, இப்படத்தை இயக்கினார். ஜோதிகாவும், சூர்யாவும் திருமணத்திற்கு பின் காதலர்கள் போல வாழ்கின்றனர். இந்நிலையில், சூர்யாவின் பழைய டைரியை, ஜோதிகா பார்க்கிறார். அதில், சூர்யாவின் கல்லுாரி கால காதல் கதை இருக்கிறது. இதனால் ஜோதிகா, அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்பின் என்ன நடந்தது என்பது தான், படத்தின் கதை. கல்லுாரி மாணவர், பொறுப்புள்ள குடும்ப தலைவர் என, சூர்யா இரு முகம் காட்டியிருந்தார். கல்லுாரி பருவத்தில் நடக்கும் காதல் கதையில், அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருந்தார், இயக்குனர். படத்தில், சூர்யா - ஜோதிகாவை விட, சூர்யா - பூமிகா ஜோடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அசின். கிராமத்திற்கு வடிவேலு, நகரத்திற்கு சந்தானம் என, இரண்டு காமெடி நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர். 'என்னம்மா அங்க சத்தம்...' போன்ற காமெடி, இன்றும் 'மீம்ஸ்'களாக உலா வருகின்றன. படத்தின் வெற்றிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் முக்கிய பங்கு வகித்தது. 'முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம் உறங்கும், அவளுக்கென்ன அம்பாசமுத்திர...' பாடல்கள் ரசிக்கச் செய்தன. அந்தோணியின் எடிட்டிங்; ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்தன. இந்த படம், தெலுங்கில் நுவ் நேனு பிரேமா; மராத்தியில், து ஹாய் ரீ என, 'ரீமேக்' செய்யப்பட்டது. படத்தின் தலைப்பு போலவே இருந்தது, சில்லுனு ஒரு காதல்! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Sillunuorukadhal
Suriya
Jyothika
Bhumika
Ar-rahman
Director-krishna
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood

மறக்க முடியுமா? - எம்டன் மகன் - Marakka Mudiyuma : Emm Magan

மறக்க முடியுமா? - எம்டன் மகன் 10 மார், 2021 - 14:48 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : எம்டன் மகன் வெளியான ஆண்டு : 2006 நடிகர்கள் : பரத், கோபிகா, நாசர், வடிவேல், சரண்யா இயக்கம் : எம்.திருமுருகன் தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ் 'டிவி சீரியல்' இயக்குனராக இருந்து, தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர், திருமுருகன். தந்தையின் கண்டிப்புக்கு பின்னால் கரிசனம் இருக்கும் என்பதை பாசம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை கலந்து, ஆபாசமில்லாமல் அழகாக இயக்கியிருந்தார், திருமுருகன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், எம்டன் மகன் என்ற தலைப்பு, எம் மகன் என்று மாற்றப்பட்டு, படம் வெளியானது. மளிகைக் கடை வைத்திருக்கும், கண்டிப்பு பேர்வழியான நாசரின் மகன் பரத், கல்லுாரியில் படிக்கிறார். கிடைக்கும் நேரத்தில், கடையில் தொழிலாளியாக வேலை செய்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நாசர், தன் மகனை புரிந்துக் கொள்ளாமல், தண்டிக்கிறார்; அவமானப்படுத்துகிறார். இந்நிலையில் தன் முறைபெண் கோபிகாவை காதலிக்கும் பரத், அவருடன் ஊரில் இருந்து சென்றுவிடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை. படத்தின் நாயகன், நாசர் தான். அவரின் நடிப்புக்கு, 'சல்யூட்' வைக்கலாம். தமிழ் சினிமா, இன்னும் அவரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படத்தின் இன்னொரு நாயகன், வடிவேலு. மனிதர் வரும்போதெல்லாம், வெடித்து சிரிக்க, ரசிகர்கள் தயாராக இருந்தனர். சென்டிமென்ட் காட்சியிலும், வடிவேலு ஜொலித்தார். பக்கத்து வீட்டு பையன், பொண்ணு போல நடித்திருந்தனர் பரத்தும், கோபிகாவும். அவமானப்படுதல், கண்ணீர் சிந்துதல், காதல் என, பரத் நிறைவாக நடித்திருந்தார். வித்யாசாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி கண்டது. எல்லாருக்கும் பிடிக்கும் எம்டன் மகன்! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Emmmagan
Bharath
Gopika
Vadivelu
Nassar
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news

மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி - Marakka Mudiyuma : imsai arasan 23am pulikesi

மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி 07 மார், 2021 - 09:42 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : இம்சை அரசன் 23ம் புலிகேசி வெளியான ஆண்டு : 2006 நடிகர்கள் : வடிவேலு, நாசர், மனோரமா, இளவரசு, ஸ்ரீமன் இயக்கம் : சிம்புதேவன் தயாரிப்பு : எஸ் பிக்சர்ஸ் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்குப் பின், 28 ஆண்டுகள் கழித்து வெளியாகிய, சரித்திரக் கதை படம், இம்சை அரசன் 23ம் புலிகேசி. இதுவரை, இந்திய சினிமாவில், சரித்திர கதைகளை, யாரும், ஸ்பூப் செய்ததாகவும் சரித்திரம் இல்லை. அதை சாதித்துக் காட்டியது, இ.அ.23ம் புலிகேசி! கார்ட்டூனிஸ்டாக இருந்த சிம்புதேவன், இப்படத்தின் மூலம் இயக்குனரானார். ஆதிகாலத்து, உத்தமபுத்திரன் படத்தின், ஆள்மாறாட்ட கதையின், ரீமேக் தான் இப்படம் என்றாலும், இப்படம் காமெடியை முன்னிறுத்தி, திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. புலிகேசி, உக்கிரபுத்தன் என, வடிவேலு, இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். அதில், மேல்நோக்கிய கூர் மீசையுடன் வந்த புலிகேசி தான், திரையரங்கை அதிரச் செய்தார். தேஜா ஸ்ரீ, மோனிகா என, இரு கதாநாயகியர். வா மா மின்னல்... என்பது போல வந்து, காணாமல் சென்றுவிடுவர். படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொருவர், மங்குனி அமைச்சராக வரும் இளவரசு. மனிதரின் உடலும், மொழியும், கககபோ! என, அடித்துச் சொல்லலாம். கரடி காறித் துப்பும் காட்சி, அரசு ஊழியரின் வாழ்க்கை, குளிர்பான நிறுவனம், ஜாதிச் சண்டை மைதானம், ஆயுதபேர ஊழல், தண்ணீர் சேகரிப்பு என, படத்தில் ஏகப்பட்ட, சூப்பர் காட்சிகள் இடம் பெற்றன. கலை இயக்குனர், பி.கிருஷ்ணமூர்த்தியின் உழைப்பிற்கும், சபேஷ் - முரளியின் இசைக்கும், ஒரு பூங்கொத்து கொடுக்கலாம். இப்படத்தின் இரண்டாம் பாகம், இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் துவங்கியது. யார் கண்பட்டதோ, படம் பிரச்னையில் சிக்கி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் புலிகேசி வரணும்... நாங்க, வயிறு வலிக்க சிரிக்கணும்! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Imsaiarasan23ampulikesi
Vadivelu
Chimbudevan
Director-shankar
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news
Tamil-actors-gallery

மறக்க முடியுமா? - சச்சின் - Marakka Mudiyuma : Sachin

Marakka Mudiyuma : Sachin | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Sachinmovie
Vijay
Genelia
Johnmahendran
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news
Tamil-actors-gallery

மறக்க முடியுமா? - அந்நியன் - Marakka Mudiyuma : Anniyan

மறக்க முடியுமா? - அந்நியன் 03 மார், 2021 - 19:46 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : அந்நியன் வெளியான ஆண்டு : 2005 நடிகர்கள் : விக்ரம், சதா, விவேக் பிரகாஷ்ராஜ், நாசர் இயக்கம் : ஷங்கர் தயாரிப்பு : ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன் குடிமக்களாகிய நாம், சட்டத்தை மதிக்கிறோமா என்ற கேள்விக்கு, திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார், ஷங்கர். அது தான், அந்நியன்! சட்டத்தை மீறுவோரை, ஹிந்து வேதங்களில் ஒன்றான, கருட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள தண்டனைகளை பயன்படுத்தி கொல்கிறார், விக்ரம். ஷங்கரின் எண்ணத்தில் இருந்த படத்தை, தன் தோள் மீது சுமந்தது, நடிகர் விக்ரம் தான். 'மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர்' பாதிப்புக்கு உள்ளானவராக மிரட்டியிருந்தார். அப்பாவி அம்பி, காதல் மன்னன் ரெமோ மற்றும் கொலைகார அந்நியன் என, மூன்று அவதாரங்களில், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பிரகாஷ்ராஜின் நடிப்பும் பாராட்டப்பட்டது. கதை, திரைக்கதையில் ஷங்கருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா, வசனத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்தார். 'ஐந்து பைசா திருடினா தப்பா...' என்ற வசனம் வெகு பிரபலம். இப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில், 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியானது. பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும், அந்நியன் பெற்றது. பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக, 'டைம் ப்ரீஸ்' யுக்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட கராத்தே பள்ளி சண்டைக் காட்சி, ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்தது. பாடல் காட்சிக்காக, ஊர்களுக்கு வர்ணம் தீட்டியது, பல கி.மீ., தார் சாலையை பட்டுச்சேலையாக மாற்றியது, மலைகளில் படம் வரைந்தது என, தன் வழக்கமான பிரமாண்டத்தை பாடல்களிலும் காட்டியிருந்தார், ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், பின்னணி இசையும், இப்படத்திற்கு வலுசேர்த்தது. மனதிற்கு நெருக்கமானான், அந்நியன்! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Anniyan
Vikram
Director-shankar
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood
Tamil-news
Tamil-actors-gallery
Tamil-actress-gallery

மறக்க முடியுமா? - உள்ளம் கேட்குமே - Marakka Mudiyuma : Ullam ketkume

மறக்க முடியுமா? - உள்ளம் கேட்குமே 03 மார், 2021 - 19:50 IST 0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய எழுத்தின் அளவு: படம் : உள்ளம் கேட்குமே வெளியான ஆண்டு : 2005 நடிகர்கள் : ஷாம், ஆர்யா, லைலா, அசின், பூஜா இயக்கம் : ஜீவா தயாரிப்பு : மகாதேவன் கணேஷ் ஒளிப்பதிவாளர் ஜீவா, வித்தியாசமான திரைக்கதையுடன் இயக்குனராக அறிமுகமான படம் 12 பி. அதற்கு அடுத்ததாக, 2002ல், பெப்சி என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார். பல்வேறு தடைகளை, இப்படம் சந்தித்தது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ஒரு வழியாக, 2005ம் ஆண்டு தான் படம் வெளியானது. படத்தின் பெயர், உள்ளம் கேட்குமே என மாறியது. ஆர்யா, பூஜா மற்றும் அசின் ஆகியோர், தமிழ் சினிமாவின் முதன் முறையாக அறிமுகமாகிய படம் இது தான். படப்பிடிப்பு தாமதத்தால், ஆர்யா நடிப்பில், அறிந்தும் அறியாமலும்; அசின் நடிப்பில், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி; பூஜா நடிப்பில், ஜே ஜே படமும் ரிலீஸாகிவிட்டது. சினிமா வரலாற்றில், தாமதமாக வெளியாகும் படம் வெற்றி பெறுவதில்லை. இப்படம், ஒரு வாரத்தில் தியேட்டரில் இருந்து வெளியேறியது. அடுத்த சில நாட்களில், 'ரீ ரிலீஸ்' செய்தபோது, படம் வெற்றி பெற்றது. கல்லுாரி நண்பர்களான ஐந்து பேர் இடையே உருவாகும் காதலும், பிரிவும் தான், படத்தின் திரைக்கதையாக மாற்றியிருந்தார், ஜீவா. இப்படம் பலருக்கு, அவர்களின் கல்லுாரி வாழ்க்கையை நினைவூட்டியது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருந்தாலும், பலரின் மனதை கொள்ளைக் கொண்டது, லைலா தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், 'ஓ மனமே, என்னை பந்தாட, மழை மழை, லேகோ லைமா...' உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கச் செய்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்களும், ஜீவாவின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. இப்படம், தெலுங்கில், ப்ரேமின்சி சூடு என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கல்லுாரி நாட்களில் மீண்டும் வாழ்ந்திட, உள்ளம் கேட்குமே! Advertisement கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய

Ullamketkume
Arya
Shayam
Laila
Asin
Pooja
Tamil-cinema-news
Tamil-cinema
Tamil-movies
Tamil-film
Kollywood

vimarsana © 2020. All Rights Reserved.