Review Dmdk Internet Wing Chennai India In chennai, tamil-nadu, india | Political In Chennai
Only 50% People Answered Yes For the Poll
1 Votes
1 Votes
Dmdk Internet Wing Chennai India
saligramam
Chennai,Chennai city corporation
Tamil-nadu,India - 600093
Noreply@vimarsana.com
Detailed description is Desiya Murpokku Dravida Kazhagam is a regional political party formed by Tamil film actor Vijayakanth in the Indian state of Tamil Nadu விஜயராஜ் என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள், மதுரை மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் கே.என். அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.. ஆரம்பவாழ்க்கைமற்றும்கல்வி. தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.. முதல் போராட்டம். படிப்பைவிடவும் விளையாட்டிலேயே அதிக ஆர்வமாக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் கண்ணுக்குள் தீத்துளியாய் தூறியதால் இதயம் நெருப்புப்பையாய் மாறியது தீவிரமாக நடைபெற்றதால் அதனால் ஈர்க்கப்பட்டு இந்தியை எதிர்த்தார். இந்த நிகழ்ச்சி. எனவேதான் இறுதிவரை தமிழ் தவிர பிற மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியாய் இருந்தார். பள்ளிப்பருவத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களை அதிகம் பார்த்ததினால் வள்ளல் குணம் அவருக்குள் வளர்ந்து விட்டது.. 1978-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தி. நகரில் உள்ள ரோகினி லாட்ஜில் தான் ஆரம்பகாலத்தில் தங்கினார். 1978 ஆம் ஆண்டு இயக்குனர் திரு. M.A. காஜா அவர்களின் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வைத்தார். விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார். 1978 ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர்மன்றமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலமை ரசிகர் மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக திரு. ராமுவசந்தன் அவர்கள் இருந்து வந்தார். திரையுலகில் விஜி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.. 1982 ம் ஆண்டு தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்ற முழக்கத்துடன் ”தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர்மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற கொள்கையுடன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்துட்ட உதவிகள் செய்யப்பட்டது.மன்ற திரப்புவிழா என்றாலே உதவிசெய்யும் விழாவாக மாறியது. 1985 ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்டார்.. சாட்சி, சட்டம் சிரிக்கிறது, நீதி பிழைத்தது போன்ற சமூக விழிப்புணர்வு படங்களில் நடித்து மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு ”புரட்சிக்கலைஞர்” என்ற பட்டமும் கிடைத்தது.. . கேப்டன்எனப்பெயர் வரக்காரணம். ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.. ஈழத்திற்காக சிம்மக்குரல். . 1984-ல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து நடிகர் நடிகைகளுடன் “ஈழ படுகொலை யை” நிறுத்திட தமிழக ஆளுனருக்கு மனு கொடுத்தார். 1986 ம் ஆண்டு ஈழப்படுகொலைகளை நிறுத்தக்கோரி தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் சென்னை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டார், 1989 ம் ஆண்டு மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். மண்டபம் முகாமுக்கு சென்றபோது புரட்சிக்கலைஞர் விஜயகாந்திற்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்தது, இதை பொருத்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா ஒரு சினிமா நடிகருக்கு கருப்பு பூனைபடை பாதுகாப்பா எனக்கு இல்லையா என சட்டமன்றத்தில் பேசினார்.. 1994-லிருந்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்தார் என்றபோதும் ஆண்டுதோறும் மக்களுக்காக செய்யும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வருகிறார்.. குடும்பவாழ்க்கை. 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.. ஈழ விடுதலைக்காக போராடிய போராளி பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், முருகன் மேல் உள்ள பற்றாலும் எனவும் தாம் பிறந்த மதுரை மண் மீது உள்ள பற்றாலும் இளையமகனுக்கு சண்முகபாண்டியன் என பெயர் சூட்டினார்.. நடிகர் சங்கம். 1999 முதல் 2004 வரை கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக செயல்பட்டார்.. நடிகர் சங்க தலைவராக பதவியேற்றவுடன் அனைத்து நடிகர்களையும் ஒன்றினைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி நெடுங்காலமாக கடனில் இருந்த நடிகர் சங்க கடனை அடைத்தார்.. நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.. 2002 ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அனைத்து நடிகர்களையும் ஒன்றினைத்து நமக்கு சேரவேண்டிய தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாது என நெய்வேலியில் போராட்டம் நடத்தப்பட்டது.. மன்றக்கொடி அறிமுகம். 2000 ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தனது ரசிகர் மன்றத்திற்கு என கொடியை அறிமுகம் செய்தார்.. சிகப்பு : {ஆற்றல்} நம் அனைவரின் ரத்தமும் ஒரே நிறம் என்பதை குறிக்கும்.. மஞ்சள் : அன்பு, அறம், ஆன்மீகம், அமைதி ஆகியவற்றை குறிக்கும்.. கருப்பு : மக்கள் வாழ்விலுள்ள இருளை குறிக்கும்.. நடுவில் தீபம் ஏந்திய கை : மக்கள் வாழ்வில் உள்ள இருளை போக்கும் “புரட்சி தீபம்” என்பனவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.. கட்சி துவங்குவதாக அறிவிப்பு. 2005 ம் ஆண்டு கட்சி துவங்குவேன் என்று திருவண்ணாமலையில் கேப்டன் விஜயகாந்த் அறிவித்தார்,. அதே ஆண்டு ஈரோடு வ.உ.சி. பூங்கா திடலில் வெள்ளக்கோவிலில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நகரில் நடந்த 150 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கும் விழாவில் மாநாட்டு தேதி மற்றும் இடத்தை கேப்டன் விஜயகாந்த் அறிவித்தார்.. கட்சி துவக்க விழா. மதுரை மாநகரை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் 150 ஏக்கர் பரப்பளவில் 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மாநாடு நடைபெற்றது.. பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களால் கேப்டன் விஜயகாந்திற்க்கு வழங்கப்பட்ட திரு புரட்சிதலைவர் M.G.R. அவர்கள் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தார்.. பின்னர் அங்கு நடைபெற்ற தொண்டர் படையினரின் அணிவகுப்பை கேப்டன் விஜயகாந்த் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலை கேப்டன் விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து மேடைக்கு வந்தார். அப்போது அரங்கில் கூடியிருந்த லட்சக்கணக்கானோர் புரட்சி கலைஞர் வாழ்க, வருங்காலமுதல்வர் வாழ்க, தமிழக நம்பிக்கை நட்சத்திரமே எங்கள் கேப்டனே வருக என்று குரல் கொடுத்தனர்.. அவர்களை பார்த்து கேப்டன் விஜயகாந்த் கைகூப்பி வணங்கியும், கையை அசைத்தும் வணக்கம் தெரிவித்தார். உடனே கூட்டத்தினர் அரங்கமே அதிரும் வகையில் கரவொலி எழுப்பினார்கள். அதன் பின்பு காந்தி-காமராஜர் பெயரில் அமைக்கப்பட்டு இருந்த மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார்.. தேசிய முற்போக்கு திராவிட கழகம். மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 7.50 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மாநாட்டிற்கு மாநில பொது செயலாளர் சொ.ராமுவசந்தன் தலைமை தாங்கி பேசினார். அதன் பின்பு 9.15 அளவில் கேப்டன் விஜயகாந்த் தனது மன்றத்தை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தினார்.. . தனது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய கேப்டன் விஜயகாந்த்,. நான் முன்பு உங்களிடம், எல்லோருமே நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். அதேபோல் எல்லோரும் திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இங்க வந்து இருக்கிறீர்கள்.. நான் இங்கு உள்ளவர்களிடம் இந்த பந்தலை விரிவுபடுத்த முடியுமா என்று கேட்டேன்.. அதற்கு அவர்கள், இதுவரையில் இப்படி ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை பார்த்ததில்லை. இரண்டரை லட்சம் பேர் உட்காரலாம் என்றார்கள். வெளியேயும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். நாம் யார் எப்படிப்பட்டவர்கள்? என்று தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் இந்திய நாட்டிற்கே தெரியப்படுத்த வேண்டும். இதுதான் இந்த மாநாடு. கட்சிக்கு பெயர் வைப்பது குறித்து நானும் எனது மனைவியும் கலந்து பேசினோம். இரண்டு, மூன்று மாதங்களாக பல பெயர்களை எழுதிப் பார்த்தேன். குழப்பமாக இருந்தது. உண்மையிலே சொல்லப்போனால் நேற்று இரவு தான் பெயரை முடிவு செய்தேன். அது என்னவோ தெரியவில்லை. கடவுளின் கருணையாலும் உங்களது ஆசியினாலும் நடந்துள்ளது.. தேசிய முற்போக்கு திராவிட கழகம். மதுரையை ஆளும் சிவபெருமான், மீனாட்சி, திரும்பரங்குன்றம் முருகன், எனது குலதெய்வம் அருளாளும், உங்களது ஆசியினாலும், இன்று முதல் நமது கட்சியின் பெயர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழக்கப்படும். திராவிடம் என்றால் தமிழ் மட்டும்தான் என்று எத்தனையோ பேர் நினைக்கிறார்கள். நாலு மொழிகள் சேரந்துதான் திராவிடநாடு திராவிடநாடு தேசியத்துக்குள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதால் தேசியத்தை சேர்த்து உள்ளோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க தேசியம் அவசியம்.. முற்போக்கு என்ற வார்த்தை ஏன்? முற்போக்கு என்பதற்கு காரணம் இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற பல விஷயங்களில் பின்தங்கியே இருக்கிறோம். இந்த நிலை மாற முற்போக்குத்தனமான கொள்கைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் வளரவேண்டும் என்பதற்காக முற்போக்கு என்ற வார்த்தையை சேர்த்து உள்ளோம். எந்த அளவிற்கு இந்த பெயர் பிரபலம் அடையும்? நிச்சயமாக பிரபலம் அடையும். அது உங்களால் முடியும். நீங்கள் இருக்கிறீர்கள். நான் நம்பி இருப்பது மக்களைத்தான். எப்படி மன்றக் கொடி 5 ஆண்டுகளில் பிரபலம் அடைந்ததோ அதுபோல் கட்சியின் பெயர் 6 மாதக்காலத்தில் பிரபலம் அடையும். 90 சதவீத மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.. 50 சதவீத ஓட்டுக்கள் பெண்களிடம் உள்ளது என்பதும் எனக்கு தெரியும். பெயருக்கு ஏற்றார் போல் கட்சியின் செயல்பாடுகள் அமையும். மற்றவர்களைப் போன்று இரண்டு மூன்று நாள் மாநாடு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது தொண்டர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல. ஏழைகள்தான். அதனால்தான் ஒருநாள் மாநாடு நடத்துகிறேன். உங்கள் சக்தி அனைவருக்கும் தெரிய வேண்டும். சிறுசிறு தவறுகள் இருக்கலாம். அது எல்லோரிடமும் இருக்கும். ஆனாலும் எனது தொண்டர்கள் ராணுவத்தைப் போன்றவர்கள். இவ்வாறு கேப்டன் விஜயகாந்த் பேசினார்.. மன்றக்கொடி கட்சிக்கொடியானது. பேசி முடித்ததும் தனது ரசிகர் மன்றத்தின் கொடியை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடியாக கேப்டன் விஜயகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்து அறிமுகப்படுத்தினார்.. தொண்டர்கள் உடை பற்றிய உத்தரவு:. அரசியல் மாநாட்டுக்கு வரும் கட்சித் தொண்டர்கள், தாங்கள் சார்ந்த அணிக்கென அறிவிக்கப்பட்டுள்ள சீருடையில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.. மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்தனர். புதன்கிழமை காலை 7.16 மணிக்கு மாநாடு தொடங்குவதால், செவ்வாய்கிழமை இரவு முதல் மாநாட்டு அரங்குக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் வசதிக்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டன.. மெகா டிஜிட்டல் திரை: குறிப்பாக, ‘மெகா டிஜிட்டல் திரை’ (எல்.சி.டி சிஸ்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இத்திரையில் மாநாட்டு மேடையில் நடைபெறும் அனைத்துக் காட்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.. பல லட்சம் செலவில் நவீன டிஜிட்டல் திரை சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு மாநாட்டு நிகழச்சிகள் ஒளிபரப்பபட்டது. 16அடி அகலமும், 18 அடி நீளமும் உடைய டிஜிட்டல் திரையில் துல்லியமாக்க் காட்சிகளைக் காணும்படி அமைக்கப்பட்டுள்ளது.. நடமாடும் டிஜிட்டல் திரை: மாநாட்டு வளாகத்தின் வெளிப்புறத்தில் இதே போன்ற அமைப்புடைய நடமாடும் நவீன டிஜிட்டல் திரையும் வைக்கப்பட்டது.. இத்திரையில் மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சிகளை அரங்கின் வெளியில் இருப்போரும் பார்த்தனர்.. 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பல லட்சம் வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். 2009 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல லட்சம் வாக்குகளை பெற்றது தேமுதிக. 2011 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, களம் கண்ட தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.. 28-6-2006 தேமுதிகவின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் மீது ஈர்ப்பு கொண்ட தொழிலாளர்கள் பலரும், கேப்டனை வலியுறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2006 ம் ஆண்டு ஜீன் மாதம் 28 ம் தேதி தேமுதிக தொழிற்சங்க பேரவை தொடங்கப்பட்டது.. கட்சிக் கொள்கைகள். அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம்.. தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்துவது, எதிர்காலத்தில்அதை அறவே ஒழிப்பதும்.. தீவிரவாத்ததை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும் ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது.. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் ந்திகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது.. தமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது.. இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது.. விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது.. நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம்.. கொள்கைகள். . தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!. அன்பு, அறம், ஆற்றல்.. இயன்றதை செய்வோம்! இல்லாதவர்க்கே!!. அன்னை மொழி காப்போம்! அனைத்து மொழியும் கற்ப்போம்!!. லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம்!. வறுமையை ஒழிப்போம்!. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி, நோயற்ற சுகாதார வாழ்வு.. படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவதே லட்சியம். விவசாயிகளுக்கு நல்லவிதை, நல்ல உரம், நல்ல விளைச்சல், நல்ல விலை. புதிய சிந்தனை, புதிய எண்ணங்கள், புதிய திட்டங்களோடு மக்களுக்கு செய்யும் ஆட்சியே நல்லாட்சி. முடியாது என்பது முட்டாள்களுக்கு சொந்தமான வார்த்தை முடியும் என்பதே அறிவாளிக்கு சொந்தமான வார்த்தை. ஜாதி என்பது பிறப்பில் இல்லவே இல்லை, நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில் ஏஅது ஜாதி. இளைஞர்களும், பெண்களும் மாற்றத்தின் மிகப் பெரிய சக்தி. இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு , பெண்களுக்கு சம உரிமை. தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். ஜாதி, மத பேதமற்ற, ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமுதாயம், எம்மதமும் என் மதமே.. . ஆண்டு விழா. 2005 – மதுரை - கட்சி துவக்கவிழா. 2006 – நெல்லை. 2007 – புதுக்கோட்டை. 2008 – சென்னை - இளைஞரணி மாநாடு. 2009 –. 2010 –. 2011 – சேலம் - மக்கள் உரிமை மீட்பு மாநாடு. 2012 – கன்னியாகுமரி. 2013 – தூத்துக்குடி - மின்வெட்டை கண்டித்து. 2014 – உளுந்தூர்பேட்டை( எறஞ்சி) ஊழல் எதிர்ப்பு மாநாடு. போராட்டங்கள். மதுரையில் பள்ளியில் படிக்கும்போதே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.. 2006 ம் ஆண்டு முதன் முதலாக விருதாச்சலத்தில் வறுமை ஒழிப்புதினம் கடைபிடிக்கப்பட்டது.. 7-1-2006 ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து குடியரசுத்தலைவர், பிரதமர், நீர்பாசனத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.. 11-4-2006 தமிழகம் முழுவதும் 90 நாட்களில் 27,000 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.. 2-7-2006 சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்க திட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என்றும் அதற்க்கான மாற்றுதிட்டத்தை சொன்னார்.. 24-6-2006 நெய்வேலி நிலக்கரி சுரங்க பங்குகளை தனியாருக்கு விற்ப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2-12-2006 முல்லை பெரியார் அணை பிரச்சனைக்காக தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது, கேப்டன் விஜயகாந்த் தேனியில் உண்ணாவிரதம் இருந்தார்.. 7-11-06 இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இலங்கை அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.. 6-6-2006 பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம். 12-7-2006 மும்பை குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம்.. 17-11-06 போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க இலங்கை அரசை நிர்பந்திக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.. 8-3-2007 வேலூரில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. 21-3-2007 விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கேப்டன் விஜயகாந்த் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.. 2-4-2007 அப்பாவி மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவதை கண்டித்து மீனவர் அமைப்பு சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்துக்கு தேமுதிக முழு ஆதரவு கொடுத்தது.. 11-4-2007 பஸ் கட்டண உயர்வை கண்டித்து கழக பொதுச்செயலாளர் ராமுவசந்தன் அவர்கள் தலைமையில் விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 8-6-2007 இலங்கை தலைநகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்க்கு கண்டனம்.. 9-3-2008 திருச்சியில் உலக மகளிர்தின மாநாடு நடத்தப்பட்டது.. 07-4-2008 தமிழர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கின்ற மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேப்டன் விஜயகாந்த் சென்னையில் கலந்துகொண்டார்.. 30-6-2008 விலைவாசி உயர்வை கண்டித்து மக்களுக்கு குடும்ப நிதியுதவி கேட்டு பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.. 13-7-2008 தமிழக மீனவர்களுக்காக கட்சத்தீவை மீட்ககோரி கேப்டன் விஜயகாந்த் தலைமையில் ராமேஸ்வரத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. 27-7-2008 தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக தஞ்சையில் மாபெரும் ஆர்ப்பாட்டம். 7-9-2008 தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கேப்டன் விஜயகாந்த் கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்.. 16-11-2008 விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டைக் கண்டித்து மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 29-9-2009 தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் கட்சத்தீவை மீட்பதற்க்காகவும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.. 21-4-2009 இலங்கை வாழ் தமிழர்கள் இன்னல்கள் தீர்க்க சென்னையில் மகளிர் அமைப்பு சார்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.. இலங்கையில் நடந்து வந்த போரை நிருத்த வழியுறுத்தி 20-2-2009 அன்று சென்னை மெரினா கடர்கறையில் உள்ள மன்றோ சிலையிலிருந்து பேரணியாக சென்று அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க அதிபர் திரு ஃபாரக் ஒபாமா மற்றும் ஐநா பொதுச்செயலாளர் திரு பான்-கி-மூன் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது, அதை தொடர்ந்து நாடுமுழுவதும் இருந்து அமெரிக்க அதிபர் திரு ஃபாரக் ஒபாமா மற்றும் ஐநா பொதுச்செயலாளர் திரு பான்கிமூன் இருவருக்கும் மின்னஞ்சல் அனுப்பபட்டது.. 7-2-2010 தமிழகத்தில் மறைமுகமாக பஸ்கட்டணம் உயர்த்தப்படதை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 19-2-2010 விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.. 7-3-2010 ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையத்திற்க்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், சிமெண்ட் ஆலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரியும் அரியலூர் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 19-4-2010 உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற வந்த பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.. 1-4-2010 மதுரை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சியை கண்டித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. 2010 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் இலவச திருமண மண்டபம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. 19-8-2010 நாமக்கலில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, 20-8-2010 அன்று தர்மபுரியிலும் 22-8-2010 அன்று தென்காசியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. 13-7-2010 இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை பனகல் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 22-10-2010 மத்திய அரசின் பஞ்சு ஏற்றுமதி கொள்கையை கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. 16-11-2010 விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது கொலை கொள்ளை கடத்தல் போன்ற குற்றச்செயல்களை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது.. 9-1-2011 திமுக ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், தமிழர்களின் உரிமையை மீட்கவும் சேலத்தில் மிக பிரம்மாண்டமாக மக்கள் உரிமை மீட்புமாநாடு நடத்தப்பட்டது.. 18-2-2011 திருப்பூரில் உள்ள சாயபபட்டறைகளை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது, திமுக அரசின் மெத்தனபோக்கினால் பலபேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. 24-11-2011 பால் விலை பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்றது, கேப்டன் விஜயகாந்த் சென்னை தலைமை கழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்.. 1-6-2012 பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேப்டன் விஜயகாந்த் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.. விழுப்புரத்தில் 2012 ம் ஆண்டு திருநங்கைகளின் நலனுக்காக ரூபாய் 5 இலட்சம் மதிப்பிலான இடம் அளிக்கப்பட்டது.. 2012 ம் ஆண்டு தஞ்சாவூரில் தற்கொலை செய்துகொண்ட விவசாய குடும்பங்களுக்கு தலா 25,000 வழங்கி, விவசாயிகளின் பிரச்சனைக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.. 19-6-2012 தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணித்தார்.. 13-3-2013 பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.. 19-3-2013 ஈழ தமிழர் பிரச்சனைக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு தேமுதிக சார்பில் முழு ஆதரவு அளிக்கப்பட்டது.. 1-4-2013 மக்கள் பிரச்சனைகளுக்காக போராடிய 6 சட்டமன்ற உறுப்பினர்களை 6 மாதம் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை MGR நகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.. 12-5-2013 கடுமையான மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.. 2-8-2013 விதிமுறைகளுக்கு புறம்பாக தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வி.வி. மினரல் அதிபர் வைகுண்டராஜனை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.. நலத்திட்ட உதவிகள். 2003 ம் ஆண்டு நெசவாளர்கள் பிரச்சனையின் போது திமுக. கஞ்சிதொட்டியும், அதிமுக. பிரியாணி பொட்டலங்களையும் வழங்கினர். ஆனால் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தனது ரசிகர் மன்றம் சார்பாக 1 கோடி ரூபாய் அளவிற்க்கு துணிகளை வாங்கி ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி நெசவாளர் பிரச்சனை தீர வழிவகை செய்தார். இந்த முயற்ச்சியின் பலனாக கல்லூரி மாணவ மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு கைத்தறி ஆடைகளை அணியத் தொடங்கினார்கள்.. தமிழ்நாடு அளவில் பனிரெண்டாம் வகுப்பில் தமிழ்வழி கல்வியில் பிரிவில் முதல் மூன்று இடம்பெறும் வரும் மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.5,000/- பரிசளித்து வந்தார்.. ஏழை குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை, போன்றவைகள் வாங்க ஆண்டுதோறும் ரூபாய் 25 இலட்சம் வழங்கினார்.. MGR பள்ளியின் வாய்பேசாதோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ. 50,000/- வழங்குகிறார். லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.25,000/- வழங்குகிறார். அதோடு மட்டுமல்லாது. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தொடங்கி அதையும் சிறப்பாக நடத்தி வருகிறார். அதில் ஏழை மாணவர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர்.. 1990 முதல் 1995 வரை ஆண்டுதோறும் 11,00,000 ரூபாய் கல்வி நிதியுதவியாக வழங்கினார், 1995 க்கு பிறகு 2000 ம் ஆண்டு வரை அந்த நியுதவியை 15,00,000 ரூபாயாக உயர்த்தினார், 2000 ம் முதல் 2004 வரை 20,00,000 ரூபாயாக உயர்த்தினார்.. 1987-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை நடத்தி வந்தார். பின் அதை விரிவுபடுத்தி சென்னைக்கு மாறுதல் செய்து அங்கும் இலவச சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. 2006 ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டது.. 5-10-2008 தமிழகம் முழுவதும் 60 கணினி பயிற்சி மையங்களை ஏற்ப்படுத்தி சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கணினிகளை வழங்கினார்.. 10-11-2008 சென்னை மாவட்டத்தை சார்ந்த 10 ஏழை மாணவர்களுக்கு 3 லட்சம் செலவில் 10 மடிகணினி வழங்கப்பட்டது.. 14-9-2009 அன்று பெண் சிசு கொலைகளை தடுப்பதற்க்காக 330 பெண்குழந்தைகளுக்கு தலா 10,000 வீதம் 33 லட்சம் செலவில் LIC வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. இது அவர்களின் திருமணத்தின் போது 2 லட்சமாக கிடைக்கும்.. தமிழகத்தில் பல இடங்களில் இலவச கணினி பயிற்சி மையத்தை ஏற்படுத்தி மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.. தமிழகம் முழுவதும் உள்ள படித்த படிக்காத வேலையில்லாதவர்களுக்கு தமிழகம் முழுவதும் பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.. 2005 ம் ஆண்டு வரையில் புரட்சி கலைஞருக்கு உள்ள ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை 45,000 ஆகும். அதன் பின் ரசிகர்மன்றங்கள் திறப்பதற்க்கு புரட்சிக்கலைஞர் அனுமதி தரவில்லை.. நிவாரண உதவிகள். கார்கில் போர் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 வழங்கினார், குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 வழங்கினார், ஆந்திராவில் புயல் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 2,00,000 வழங்கினார், ஒரிசா புயல் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 2,00,000 வழங்கினார், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கு நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவிட ரூபாய் 10,00,000 வழங்கினார், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,00,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார், 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி நிதியுதவியாக தமிழகத்துக்கு 10,00,000 ரூபாயும், பாண்டிசேரிக்கு 2,00,000 ரூபாயும், இலங்கைக்கு 6,00,000 ரூபாயும் வழங்கினார், 2005 ம் ஆண்டு மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்குதிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி மக்களுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை வழங்கினார் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஆளுநருக்கு கேப்டன் விஜயகாந்த் கடிதம் எழுதினார். 2007 ம் ஆண்டு தொகுதிக்கு 5 தையல் இயந்திரம் வீதம் 234 தொகுதிக்கும் 1300 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. 2007 ம் ஆண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 3,40,000 நிதியுதவி செய்தார். 2008 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டிற்க்கு வந்த தொண்டர்களின் வாகனம் விபத்திற்க்குள்ளானதில் 8 வேர் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்திற்க்கு தலா இ லட்சம் வழங்கினார், மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 வழங்கினார். காஞ்சிபுரம் ரயில் விபத்தில் 17 பேர் மரணம் அடைந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா 10,000 வழங்கினார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,00,000 ரூபாய் வழங்கினார், 25-8-2011 கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தின கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் 50 லட்சம் கொடுக்கப்பட்டது. 20-1-2012 தானேபுயல் தாக்கியபோது கேப்டன் விஜயகாந்த் தனது சம்பளத்தையும் தே.மு.தி.க. MLA-க்களின் 1 மாத சம்பளத்தையும் சேர்த்து ரூபாய் 15,00,000 யை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. உத்ரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 10,00,000 ரூபாய் நிவாரணநிதையாக பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களிடம் வழங்கப்பட்டது.. 2012 ம் ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. 24-8-2013 அன்று தனது பிரந்தநாளை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை வழங்கினார். இலவச திருமணங்கள். தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தமது சொந்த செலவில் திருமணங்கள் செய்துவைத்துள்ளார், 2000 ம் ஆண்டு தேனியில் 48 ஜோடிகளுக்கும், 2001 ம் ஆண்டு சென்னையில் 38 ஜோடிகளுக்கும், 2002 ம் ஆண்டு சேலத்தில் 66 ஜோடிகளுக்கும், 2008 ம் ஆண்டு கம்பத்தில் 54 ஜோடிகளுக்கும், 2010 ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஜோடிகளுக்கும், 2011 ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் ஜோடிகளுக்கும் 2013 ம் ஆண்டு பொன்னேரியில் 14 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.. . இலவச மருத்துவமனை. . இலவச மருத்துவமனை 25.08.1989 ஆம் ஆண்டு ஈரோட்டில் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து சென்னை சாலிகிராமத்திலும் திறக்கபட்டது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு கட்டில்கள், கலர் டி.வி. போன்றவைகளை தமிழக முதல்வர் மூலம் வழங்கினார்.. தமிழகத்தில் பல இடங்களில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார்.. தமிழகத்தில் பல இடங்களில் இரத்ததான முகாம் நடைபெற்றுவருகிறது. இதற்க்காகவே மாவட்டம் தோறும் கேப்டன் இரத்ததான இயக்கம் நடைபெறுகிறது.. . விளையாட்டு போட்டிகள். விளையாட்டின் மேல் அதிக ஈடுபாடுள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்கள் Captain Sports Academy என்ற அமைப்பை ஏற்படுத்தி 1996 முதல் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார்.
Established in the recent years dmdk internet wing chennai india in chennai , tamil-nadu in india.
This is a well known establihment acts as one-stop destination servicing customers both local and from other of the city.
Over the course of its journey , this business has establihed a firm hold in the [category].
The belief that customer satisfaction is an important as it products and services , have helped this establihment garner a vast base of customers and continue to grow day by day
Foods is provided with high quality and are pretty much the highlight in all the events in our lives.
Sweets and food are the ideal combination for any foodies to try and this dmdk internet wing chennai india is famous for the same.
This has helped them build up a loyal customer base.
They have started a long journey and ever since they have ensure the customer base remains the same and growing month on month.
As they are located in favourable location , becomes the most wanted space for the tourist.
For any kind and assistance , it is better to contact them directly during their business hours.
Premises has a wide parking area and need to avail special permissions for parking.
Pets inside the premises are not allowed and require additional permission.
Cashless payments are available and extra charges for the credit cards are levid.
They are listed in many of the food delivery networks for home delivery with appropriate charges.
They accept cards , cash and other modes of payments
Tips are not actually encouraged but customers are willing to offer any benefit as needed.
There you can find the answers of the questions asked by some of our users about this property.
This business employs inviduals that are dedicated towards their respective roles and put in a lot of effort to achieve the common vision and goals.
It is a effortless task in communiting to this establishment as there are various modes available to reach this location.
The establishment has flexible working timings for the employees and has good hygene maintained at all times.
They support bulk and party orders to support customers of all needs.