vimarsana.com


 
Advertisement
சென்னை : 'தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கு
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
சென்னை : 'தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம், அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, மக்கள் கூடும் இடங்களில், அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகளில் நோய் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும்.சில மாவட்டங்களில் வழக்கத்தை விட, குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும், இரண்டு நாட்களை விட, அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறாக, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.அதற்கான காரணம் என்ன; எந்த இடத்தில் இருந்து தொற்று அதிகமாக பரவுகிறது என்ற விபரங்களை, சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் கண்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு செய்து, கள நிலவரத்தை அறிதல் அவசியம்.
காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்துவதையும், குறைந்தபட்சம், 100 பேரையாவது பங்கேற்க வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தொற்று பரவல் குறைவாக உள்ள இடமாக இருந்தாலும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தது 20 பேரையாவது கண்காணித்து, பரிசோதனை நடத்த வேண்டும்.
மற்றொரு புறம், தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில், நோய் தொற்று பரவுகிறதா என்பதையும் கண்காணித்தல் அவசியம். தீவிர நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதியவை
பழையவை
அதிகம் விவாதிக்கப்பட்டவை
மிக மிக தரமானவை
மிக தரமானவை
தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
02-ஜூலை-202113:54:39 IST Report Abuse
இந்தியாவில் கண்ட இடத்தில எச்சில் துப்புவதை எப்போது நிறுத்துகிறார்களோ அன்றுதான் இது குறையும்.
Rate this:
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Tirunelveli ,Tamil Nadu ,India ,Tanjore ,Thanjavur ,Tiruvannamalai ,Madras , ,Secretary Radhakrishnan ,Place Yet ,திருநெல்வேலி ,தமிழ் நாடு ,இந்தியா ,தஞ்சை ,தஞ்சாவூர் ,திருவண்ணாமலை ,மெட்ராஸ் ,இடம் இன்னும் ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.