vimarsana.com


Advertisement
ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடிப்பில் முத்திரை பதித்து, தற்போது டிவி ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியில் கலக்க வரும் நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு கலகல பேட்டி...நீங்கள் சினிமாவில் பிஸி... டிவி சமையல் நிகழ்ச்சிக்கு எப்படி?
தானா நடக்குது... எனக்கு மேனேஜர் இல்லை எல்லாம் நானே பார்க்கிறேன். டிவியில் அந்த நேரம் என்ன தோணுதோ பேசணும். மக்களிடம் ஈஸியா
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடிப்பில் முத்திரை பதித்து, தற்போது டிவி ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியில் கலக்க வரும் நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு கலகல பேட்டி...
நீங்கள் சினிமாவில் பிஸி... டிவி சமையல் நிகழ்ச்சிக்கு எப்படி?
தானா நடக்குது... எனக்கு மேனேஜர் இல்லை எல்லாம் நானே பார்க்கிறேன். டிவியில் அந்த நேரம் என்ன தோணுதோ பேசணும். மக்களிடம் ஈஸியா சென்று சேர்வதோடு புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பதால் வந்துவிட்டேன்.
சமையல் நிகழ்ச்சி அனுபவங்கள் எல்லாம் எப்படி இருந்தது?
எனக்கு சமையல் தெரியாது. நல்லா சாப்பிட தான் தெரியும். இதற்கு முன் வந்த ஆஸி., ஷோ பார்க்க சொன்னாங்க. அதெல்லாம் பார்க்க மாட்டேன் என் ஸ்டைலில் பண்றேன்னு சொன்னேன். இந்த ஷோவில் சமைக்கப்படுவது உணவு மட்டுமல்ல உள்ளமும் தான்னு சொல்வேன்.
இந்த டிவி நிகழ்ச்சிக்கு பிறகு சமைக்க பழகீட்டீங்களா என்ன?
பேச்சிலரா இருந்தப்போ சாம்பார், தயிர் சாதம், புளி குழம்பு, ஆம்லேட், பிரியாணி செய்வேன். அம்மா, தங்கை, மனைவி நல்லா சமைப்பாங்க. ஒன்பதாவது படிக்கும் மகள் நல்லா சமைக்கிறா, இந்த ஷோவில் கூட ஒரு நாள் நான் சமைத்தேன்.
அண்மையில் பெங்களூரு சென்றிருந்தீர்களே?
‛டிவி' நிகழ்ச்சிக்காக சென்றேன்.10 ஆண்டுக்கு முன் பெங்களூரு சென்று, ‛அக்காடா' கன்னட படத்தில் வில்லனாக நடித்தேன். சென்னை திரும்பும்போது, கன்னடத்தில் இருந்து வந்துபோறவங்க பெரிய நடிகர் ஆவாங்கனு மேனேஜர் ஒருவர் சொன்னார். அப்போ நம்பிக்கை இல்லை. ஆனால், அது நடந்தது.
வாழ்க்கையில் உணவு கிடைக்காமல் கடந்த நாட்கள்?
கையில் காசு இருக்காது; நண்பர்கள் வருவாங்க செலவு செய்வாங்க. சினிமாவில் வாய்ப்பு தேடும்போது 5 ரூபாய்க்கு கூழ் வித்தாங்க... அப்போ 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய கூழ் சாப்பிடலாம். நிறைய நாள் கூழ் சாப்பிட்டு பசி போக்கியிருக்கேன்.
கமல், பகத் உடன் நடிக்கும் அனுபவம் சொல்லுங்க
இப்பேது தான் படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில் வெளியான போஸ்டர் பார்த்து பயந்தேன். ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேல் நம்பிக்கை இருக்கு. மாஸ் கதை.
‛லாபம்', ‛மாமனிதன்' ஓ.டி.டி.ல வெளிவரும் செய்தி?
எடுத்த படங்களை ரொம்ப நாள் பூட்டி வைக்க முடியாது. வட்டிக்கு வாங்கி படம் எடுப்பது பற்றி ஜனநாதன் நிறைய சொல்லியிருக்கார். ஓ.டி.டி., தான் ஓரளவு தயாரிப்பாளர்களை காப்பாற்றுகிறது. ஆனால், தியேட்டரில் மாஸ் ஆடியன்ஸ் உடன் பார்க்கும் சந்தோஷம் பெரிய கொடுப்பினை.
நீங்க குடும்பத்தினரோடு செலவிடும் நேரம்...
படப்பிடிப்பு இல்லாத போது வீட்டில் குழந்தைகள், மனைவியோடு பேசுவேன். வெளியூர் படப்பிடிப்பில் இருந்தால் குடும்பத்தினரை வர வைத்து விடுவேன். ரொம்பநாள் மனைவி குழந்தைகளை பார்க்காமல் இருக்கமுடியாது.
-கவி

Related Keywords

Bangalore ,Karnataka ,India ,Madras ,Tamil Nadu ,Vijay Sethupathi ,Lokesh Kanakaraj , ,After Cook ,Mass Audience ,பெங்களூர் ,கர்நாடகா ,இந்தியா ,மெட்ராஸ் ,தமிழ் நாடு ,விஜய் செததுபதி ,லோகேஷ் கனகராஜ் ,நிறை பார்வையாளர்கள் ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.