vimarsana.com
Home
Live Updates
சிங்கப்பூர் போலிஸ் படைக்கு பதக்கங்கள் : vimarsana.com
சிங்கப்பூர் போலிஸ் படைக்கு பதக்கங்கள்
பதக்கத்தின் முன்பக்கம்
4 Aug 2021 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Aug 2021 10:45
சிங்கப்பூர் போலிஸ் படையின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்நாள், முன்னாள் அதிகாரிகளுக்கும் பணிநிமித்தமாக உயிர்நீத்த அதிகாரிகளின் குடும்பத்தாருக்கும் நினைவுப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
சிங்கப்பூர் போஸில் படையின் 200 ஆண்டு நிறைவைக் குறிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நாடாளுமன்ற அவையில் போலிஸ் படையைச் சார்ந்த 69 பேர் சிறப்பு வருகையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் போலிஸ் ஆணையர் ஹூங் வீ டெக், தற்போது சேவையில் உள்ள அதிகாரிகள், முழுநேர தேசிய சேவையாளர்கள், தொண்டூழியர் சிறப்புப் போலிஸ் பிரிவு, சீருடை அணியாத அதிகாரிகள், பணிநிமித்தம் உயிர்நீத்த ஒரு போலிஸ் அதிகாரியின் குடும்பத்தினர் இருவர் போன்றவர்கள் அவர்களில் அடங்குவர்.
‘சிங்கப்பூர் போலிஸ் படை இருநூற்றாண்டு 2020 பதக்கம்’, இந்நாள், முன்னாள் அதிகாரி களுக்கு வழங்கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், பணிநிமித்தமாக உயிர்நீத்த போலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு நினைவுப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், குற்றவியல் சட்டக் கட்டமைப்பு, சிங்கப்பூர் போலிஸ் படைத் தலைமைத்துவத்தின் தரம், போலிஸ் மீது சமூகம் கொண்டிருக்கும் வலுவான நம்பிக்கையைக் கட்டிக்காத்தல் போன்றவை சிங்கப்பூர் போலிஸின் வெற்றிக்கான காரணங்கள் என்று திரு சண்முகம் பட்டியலிட்டார்.
“போலிஸ் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவர்களிடையே நிகழும் அன்றாடத் தொடர்புகள் எவ்வாறு நிகழும் என்பதைத் தீர்மானிக்கும். மக்கள், போலிஸ்காரர் சொல்லும்படி கேட்கிறார்கள், போலிஸ் அதிகாரிக்கு விசாரிக்கும் உரிமை இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இயல்புதானே என்று அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது,” என்று திரு சண்முகம் கூறினார். அத்துடன், பணிநிமித்தமாக உயிர்நீத்த போலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் புகழாரம் சூட்டினார்.
சென்ற அண்டு எந்தக் காலகட்டத்தின்போதும் சேவையாற்றிய போஸிஸ் படை அதிகாரிகள், தேசிய சேவையாளர்கள், தொண்டூழியர் சிறப்புப் போலிஸ் பிரிவினர் ஆகியோர் பதக்கம் பெறுவர். கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அல்லது தேசிய சேவை நிறைவுபெற்ற முன்னாள் அதிகாரிகளின் பங்களிப்பை அங்கீகரிக்க அவர் களுக் கும் பதக்கம் வழங்கப்படும்.
சிங்கப்பூர் போலிஸ் படையில் கடந்தாண்டு சேவையாற்றிய சீருடை அணியாத அதிகாரிகளும் பதக்கங்கள் பெறுவார்கள்.
பதக்கங்கள் அடுத்த ஆண்டு ஜூனில் வழங்கப்படும்.
சிங்கப்பூர் போலிஸ் படையின் இருநூறாம் ஆண்டு நிறைவைக் குறிப்பதற்கான சிறப்புத் தீர்மானத்தைத் தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கிறிஸ்டஃபர் டிசூஸா, 1820ல் 12 பேருடன் தொடங்கிய போலிஸ் படையில் தற்போது 45,000 பேர் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அண்மைய காணொளிகள்
08:58
10:51
09:27
12:21
Related Keywords
Singapore
,
,
Service He
,
சிங்கப்பூர்
,
சேவை அவர்
,
vimarsana.com © 2020. All Rights Reserved.