Vimarsana.com

general secretary vaiko report: Live & Latest News Updates : Vimarsana.com

கேந்திர வித்யாலயாவில் சமஸ்கிருதம்: வைகோவுக்கு பா.ஜ., பதிலடி

Advertisement 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, விருப்பப் பாடமாக தமிழ் மொழியை எடுத்து படிக்கலாம் என்ற நிலையை மாற்றியுள்ளனர். மொத்தத்தில், தமிழ் மொழியை நீக்கி இருக்கின்றனர். ஹிந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து, சமஸ்கிருதம் தான் விருப்பப் பாடம் என ஆக்கி உள்ளனர்.'அதனால், அப்பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என, தமிழக அரசு முழு செய்தியை படிக்க Login செய்யவும் 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, விருப்பப் பாடமாக தமிழ் மொழியை எடுத்து படிக்கலாம் என்ற நிலையை மாற்றியுள்ளனர். மொத்தத்தில், தமிழ் மொழியை நீக்கி இருக்கின்றனர். ஹிந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து, சமஸ்கிருதம் தான் விருப்பப் பாடம் என ஆக்கி உள்ளனர்.'அதனால், அப்பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' என, à®®.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் . இது குறித்து, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: இது அப்பட்டமான பொய். தமிழ் எங்கும் புறக்கணிக்கப்படவில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்பப் பாடமாக தமிழ் மொழி இன்றும் உள்ளது. இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும். தி.மு.க.,வினர் நடத்தும், 43 பள்ளிகளிலும், ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதற்கு எதிராக குரல் எழுப்புவாரா வைகோ? அங்கே பயிலுபவர்களுக்கு, முதலில் தமிழ் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளி பக்கம் வரட்டும். சமஸ்கிருதத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும், 22 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாகவும், புலம்பி இருக்கிறார் வைகோ. இப்படி அவர், பல முறை பொய்யாக சொல்லி, அதற்கு விளக்கமும் கொடுத்த பின்பும், அதையே சொல்கிறார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்துக்கு பதிலாக, சீன, ஸ்பானிஷ், ஜெர்மனி, பிரஞ்சு, ஜப்பான் மொழிகளில், எதையாவது ஒன்றை கற்பிக்கலாம் என்று சொல்லி, தனது வாடிகன் விசுவாசத்தையும் காட்டி இருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகள் அனைத்தும், அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அரசிடம் அனுமதி பெற்று தான் இயங்குகின்றன. அந்த தனியார் பள்ளிகள் அனைத்திலும், ஹிந்தியும், ஆங்கிலமும் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. தமிழ் பேசினாலே அபராதம் விதிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர முயற்சிக்காதது ஏன்? தி.மு.க.,வினர் நடத்தும், 43 பள்ளிகளிலும் தமிழ் மொழி, பயிற்று மொழி கிடையாது. à®®.தி.மு.க.,வை தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விட்டு, பெயரளவில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் வைகோ, அதற்காக, தி.மு.க.,விடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அரசு அல்லது தி.மு.க.,வுக்கு எதிராக கருத்து சொன்னால், ஓய்வூதியம் ரத்தாகி விடும் என்பதால், அரசும், தி.மு.க.,வும் விரும்புவதைச் செய்கிறார். குடும்பத் தலைவிக்கு ஊக்கத் தொகை மாதம்தோறும் வழங்கப்படும்; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என நிறைய விஷயங்களை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது; எதையும் செய்யவில்லை. மக்கள் கேட்கத் துவங்கி விட்டனர். இப்படிப்பட்ட பிரச்னைகளை மறைத்து, புதியவற்றை கிளப்பி, மக்கள் எண்ணத்தை மடை மாற்றம் செய்ய, தி.மு.க., முயற்சிக்கிறது. அதற்காக, வைகோவை விட்டு, இப்படி அறிக்கை வெளியிடச் செய்திருக்கின்றனர். வைகோவின் பரிதாப நிலையை கண்டு வருத்தப்படத்தான் முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் - புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை RajanRajan - kerala,இந்தியா 09-ஜூலை-202109:08:12 IST Report Abuse அல்லோல்லியா இப்படி எத்தனை காலம் தான் இந்த திராவிட முட்டு கொடுத்து பொழைப்பை ஓட்ட வேண்டியுள்ளது. வாங்கின துட்டுக்கு உழைக்கிறது தானே நியாயம். Rate this: Submit × à®µà®¾à®šà®•à®°à¯à®•à®³à¯à®•à¯à®•à¯ ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X

Germany
China
Japan
France
Spain
Spanish
French
Chinese
Kendriya-vidyalaya
Kendriya-vidyalaya-school
Philharmonic-chapter
General-secretary-vaiko-report

நல்லவேளை, நான் தான் எம்.ஜி.ஆர் வாரிசு என சொல்லாமல் விட்டீர்களே..

நல்லவேளை, நான் தான் எம்.ஜி.ஆர் வாரிசு என சொல்லாமல் விட்டீர்களே..
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Puducherry
Pondicherry
India
Tamil-nadu
Sarath-kumar
Demand-notice
Sub-speaker-jayaraman
General-secretary-vaiko
General-secretary-vaiko-report
Hindu-systems
புதுச்சேரி

vimarsana © 2020. All Rights Reserved.