Vimarsana.com

villupuram parliament: Live & Latest News Updates : Vimarsana.com

நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்

நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்
india.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from india.com Daily Mail and Mail on Sunday newspapers.

Hindustan
India-general-
India
Villupuram
Tamil-nadu
Kanesamoorthye-kongu
Twitter
Facebook
Villupuram-parliament
India-democratic
Ravi-madras
April-equality

பஞ்சமி நில விவகாரத்தை மீண்டும் கையிலெடுக்கும் விசிக: காரணம் என்ன?

09 Jul 2021 6 AM பஞ்சமி நில விவகாரத்தை மீண்டும் கையிலெடுக்கும் வி.சி.க: காரணம் என்ன? சிறுதாவூர் பங்களா ( வி.ஸ்ரீனிவாசுலு ) தமிழகம் முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, கடந்த வாரம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த வி.சி.க தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!Get Our Newsletter பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், தி.மு.க நாளிதழான முரசொலி, தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என்றும் `அசுரன்’ படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் வெடித்தன. 'முரசொலி உள்ளிட்ட தி.மு.க வசம் இருக்கும் எதுவும் பஞ்சமி நிலம் இல்லை' என தி.மு.க-வும், 'அதற்கான மூலப்பத்திரத்தைக் காட்டுங்கள்' என பா.ம.க நிறுவனர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். தி.மு.க மீது அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து பஞ்சமி நிலம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முழுக்குப் போடப்பட்டது. திருமாவளவன் - ஸ்டாலின் தற்போது வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழகத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். எந்த முகாந்திரமும் இல்லாமல் மீண்டும் பஞ்சமி நிலங்கள் தொடர்பாகப் பேச வேண்டிய தேவை என்ன என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம். Also Read மீண்டும் பஞ்சமி நிலப் பிரச்னையை வி.சி.க கையிலெடுப்பதற்கான காரணம் என்ன என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், பஞ்சமி நில மீட்பு குறித்துத் தொடர்ந்து இயங்கிவருபவருமான தடா பெரியசாமியிடம் பேசினோம். “பஞ்சமி நில மீட்பு குறித்துத் தொடர்ந்து திருமாவளவன் குரல் கொடுத்து வந்திருக்கிறார் என்றாலும், தேர்தல் அரசியலில் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைக்கத் தொடங்கிய பின்னர் அது குறித்துப் பேசுவதையே மறந்துவிட்டார். சிறுதாவூர் நிலம் பஞ்சமி நிலம் என்ற சர்ச்சை எழுந்தபோது இல்லை என அப்போது அறிக்கைவிட்ட திருமாவளவன், முரசொலி நிலம் குறித்து சர்ச்சை எழுந்தபோது மூச்சேவிடவில்லை. பஞ்சமி நில மீட்பு தொடர்பாக இதுவரை மூன்று ஆணையம் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வி.சி.க தவிர்த்து பிற தலித் இயக்கங்களெல்லாம் இணைந்து பஞ்சமி நில மீட்பு கோரிக்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். தடா பெரியசாமி முரசொலி நிலம் தொடர்பான பிரச்னையை திசைதிருப்பவும், பட்டியலின மக்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்திலிருந்து தி.மு.க-வைக் காப்பாற்றவும், முதலாளி மீது தனக்கு இருக்கும் விசுவாசத்தைக் காட்டவுமே வி.சி.க தலைவர் திருமாவளவன் தற்போது பஞ்சமி நில விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். மற்றபடி பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் என்றெல்லாம் அவருக்குத் துளியும் அக்கறை இல்லை” என உள்நோக்கத்தோடுதான் வி.சி.க பஞ்சமி நிலத்தை மீட்பைக் கையில் எடுத்திருக்கிறது என்கிறார். Also Read பஞ்சமி நில மீட்பு விவகாரத்தில் வி.சி.க உள்நோக்கத்தோடு செயல்படுகிறதா என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வி.சி.க-வின் பொதுச்செயலாளருமான ரவிக்குமாரிடம் இது குறித்துப் பேசினோம். ``பஞ்சமி நிலம் மீட்கப்பட வேண்டும் என்று தேர்தல் அரசியலுக்கு முன்பிருந்தே வி.சி.க குரல் கொடுத்துவருகிறது. அதன் விளைவாகத்தான் பஞ்சமி நிலங்கள் மீட்பது தொடர்பாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஆணையம் அமைக்கப்பட்டது. இறுதியாக உயர் நீதிமன்றம் அமைத்த ஆணையம் தமிழகம் முழுவதும் ஆய்வுசெய்து 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது. இந்த நிலங்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வி.சி.க சார்பில் கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், கடந்த முறை ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள தி.மு.க அரசிடம் பஞ்சமி நிலம் தொடர்பாகப் புதிதாக எந்த முன்னெடுப்புகளும் எடுக்கத் தேவையில்லை. இதற்கு முன் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு, உருவாக்கப்பட்ட ஆணையங்கள் தந்த தரவுகள், அரசு வெளியிட்ட அரசாணையின்படி பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம். விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தவர்கள் கண்டுபிடிக்காமல்விட்டிருப்பார்களா? இது வெறும் அவதூறு இல்லாமல் வேறு ஏதும் இல்லை. இந்த அரசு பஞ்சமி நிலம் தொடர்பாகச் சரியானதைச் செய்யும் என்ற நம்பிக்கை” எனப் பஞ்சமி நில மீட்பு தொடர்பாக முதல்வரைச் சந்தித்ததற்கான காரணத்தை விளக்கினார். பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ``முரசொலி, அறிவாலயம் அமைந்துள்ள நிலங்கள் பஞ்சமி நிலம் இல்லை. இதை, பஞ்சமி நிலங்களை மீட்க அமைக்கப்பட்ட ஆணையங்களே உறுதி செய்திருக்கின்றன. பஞ்சமி நிலம் என்பது மூன்று அல்லது நான்கு கிரவுண்ட் என இருக்காது. ஏக்கர் கணக்கில்தான் இருக்கும். எனவேதான் முரசொலி பஞ்சமி நிலம்தானே என்ற கேள்வியை எழுப்பியவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் பதிலளித்துள்ளோம். பஞ்சமி நிலத்தில் வேறு எந்தக் கட்டடம் அமைக்கப்படாது. தேர்தல் அவசரத்துக்காக முரசொலி நிலம் குறித்து பிரச்னையை எழுப்பினார்கள். ஆனால், அவர்களின் முயற்சி ஏதும் பலனளிக்கவில்லை. எனவே, அதைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்திருக்குமானால் நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கில் ஆஜராகி பதிலளித்திருக்க வேண்டுமே... எனவே, அரசியல் உள்நோக்கத்தோடு பேசுபவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. ஆர்.எஸ்.பாரதி தமிழகம் முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவரிடம் கொடுக்க வேண்டும் என வி.சி.க கோரிக்கை வைத்திருக்கிறது. அதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அவர்களின் கோரிக்கையை ஆராய்ந்து தி.மு.க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

Villupuram
Tamil-nadu
India
Thirumavalavan-stalin
Commission-tamil-nadu
Office-anna
High-court
Villupuram-parliament
Panchami-land-issue
Land-panchami
Panchami-land
Executive-committee

vimarsana © 2020. All Rights Reserved.