CBSE Class 12 results will be released today at 2 p.m. || &#

CBSE Class 12 results will be released today at 2 p.m. || சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு


Print
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பதிவு: ஜூலை
30, 
2021
10:52
AM
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளை இந்தியா சந்தித்தது.  இதனால், கடந்த மே மாதம் 4ந்தேதி நடைபெற இருந்த 12ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் கடந்த ஜூன் 1ந்தேதி காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.
இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்), நிர்மலா சீதாராமன் (நிதி), பியூஷ்கோயல் (வர்த்தகம்), பிரகாஷ் ஜவடேகர் (தகவல், ஒலிபரப்பு), தர்மேந்திர பிரதான் (பெட்ரோலியம்), ஸ்மிரிதி இரானி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு), பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில், பரந்த மற்றும் விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்தது. மாணவர்கள் நலனையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை (ரிசல்ட்) பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மாணவ, மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பெருத்த வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.  இதன்படி, www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
1.

Related Keywords

India , New Delhi , Delhi , Rajnath Singh , Dharmendra Pradhan , Elise Seetharaman , , Class Option , June View , Secretary Rajiv , State States , Central Government , இந்தியா , புதியது டெல்ஹி , டெல்ஹி , ராஜ்நாத் சிங் , தர்மேந்திரா ப்ர்யாட்ஹந் , வர்க்கம் விருப்பம் , செயலாளர் ராஜீவ் , மைய அரசு ,

© 2025 Vimarsana