மறக்க முட&#x

மறக்க முடியுமா? - ஆனந்தம் - Marakkamudiyuma


மறக்க முடியுமா? - ஆனந்தம்
10 ஜன, 2021 - 09:30 IST
0 கருத்துகள்  à®•ருத்தைப் பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : ஆனந்தம்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா
இயக்கம் : லிங்குசாமி
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...' என, குடும்பத்தோடு பாட்டு பாடிய, வானத்தைப்போல படத்திற்கு பின், ஆர்.பி.சவுத்திரி அதே போல, ஆனந்தம் படத்தையும் தயாரித்தார். விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்த லிங்குசாமி, இப்படத்தின் மூலம், இயக்குனராக உயர்ந்தார்.
சகோதர பாசத்தை அள்ளித் தெளித்த, வானத்தைப்போல படத்திலும், இவர் பணிபுரிந்தார். அப்படத்திலும், நான்கு சகோதரர்கள்; இதிலும் அப்படியே. மூத்த சகோதரர் தியாகி; இதிலும் அப்படியே. மற்றபடி இரு படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. 'என்னங்க, இப்படத்துல எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க...' என, பலரும் கருத்து தெரிவித்தனராம். ஆனாலும், கதையை மாற்றும் திட்டமில்லை என, திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார், லிங்குசாமி.
மூத்த அண்ணனாக மம்முட்டி, அசத்தியிருந்தார். 'டப்பிங்' மட்டும், மனிதர் ரொம்ப கஷ்டப்பட்டாராம். பாசமான தம்பியாக நடித்தோரில், முரளி கண்கலங்க வைத்தார். இப்படத்திற்கான கதையை, தன் சொந்த வாழ்வில் எடுத்து பயன்படுத்தியிருந்தார். படத்திற்கு, 'திருப்பதி பிரதர்ஸ்' என, பெயரிட விரும்பினார். படத்திலும், மளிகை கடையின் பெயர், அது தான். அந்த பெயர் ஏற்கப்படாததால், தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு, திருப்பதி பிரதர்ஸ் என, பெயர் சூட்டினார். அதன்பின் படத்திற்கு, 'தாமிரபரணி' என, பெயர் சூட்டப்பட்டு, இறுதியில், ஆனந்தம் ஆக மாறியது.
முரளியின் ஜோடியாக தேவயானி நடிக்கவிருந்தார். மம்முட்டி ஜோடியாக நடிக்க வேண்டிய சவுந்தர்யா விலகியதால், தேவயானி, அவருக்கு ஜோடியாக மாறினார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தன.
தமிழகம் எங்கும் பெருக்கெடுத்தது, ஆனந்தம்!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

, Aandham , Mammootty , Murali , Devayani , Rambha , Lingusamy , Tamil Cinema News , Tamil Cinema , Tamil Movies , Tamil Film , Kollywood , Tamil News , Tamil Actors Gallery , Tamil Actress Gallery , Tamil Actor Wallpapers , Tamil Actress Wallpapers , Tamil Movie News , Tamil Movie Reviews , Cinema Video Clips , Tamil Cinema Latest News , Kollywood Latest News , Tamil Movie Latest News , மம்மூட்டி , முரளி , தேவயானி , ரம்பா , தமிழ் சினிமா செய்தி , தமிழ் சினிமா , தமிழ் திரைப்படங்கள் , தமிழ் படம் , தமிழ் செய்தி , தமிழ் நடிகர்கள் கேலரி , தமிழ் நடிகை கேலரி , தமிழ் நடிகர் வால்பேப்பர்கள் , தமிழ் நடிகை வால்பேப்பர்கள் , தமிழ் திரைப்படம் செய்தி , தமிழ் திரைப்படம் மதிப்புரைகள் , சினிமா காணொளி கிளிப்புகள் , தமிழ் சினிமா சமீபத்தியது செய்தி , தமிழ் திரைப்படம் சமீபத்தியது செய்தி ,

© 2025 Vimarsana