மறக்க முட&#x

மறக்க முடியுமா? - மின்னலே - Marakkamudiyuma


மறக்க முடியுமா? - மின்னலே
14 ஜன, 2021 - 18:04 IST
0 கருத்துகள்  à®•ருத்தைப் பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : மின்னலே
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக்
இயக்கம் : கவுதம்
தயாரிப்பு : டாக்டர் முரளி மனோகர்
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், கவுதம். அடுத்த படத்தில், கவுதம் வாசுதேவ் ஆனார்; அதற்கு அடுத்து தான் கவுதம் வாசுதேவ் மேனன் என்றானார். ஓ லாலா என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார், கவுதம். பின், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். அதைத்தொடர்ந்து, மின்னலே என தலைப்பு மாறியது.
மாதவன், தன் காதலியைப் பின்தொடர, தன் முன்னாள் கல்லுாரி எதிரியான அப்பாசின் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்கிறார். இறுதியாக உண்மை வெளிவரும்போது, மாதவன் சந்திக்கும் பிரச்னையும், அதன் முடிவும் தான், படத்தின் திரைக்கதை.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன் இதன் பாடல்கள் பிரபலமாயின. 'அழகிய தீயே, ஒரே ஞாபகம், நெஞ்சைப் பூப்போல், ஓ மாமா மாமா, பூப்போல் பூப்போல், வேறென்ன வேறென்ன, வெண்மதி வெண்மதியே...' பாடல்கள் தமிழகம் எங்கும் ஒலித்தன.
'நடபைரவி' ராகத்தில், பாடலாசிரியர் தாமரை எழுதிய, 'வசீகரா என் நெஞ்சினிக்க...' பாடல், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின், முன்னணி பாடலாசிரியரானார், அவர். இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் மற்றும் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தனர்.
அலைபாயுதே படத்திற்கு பின், தமிழகம் எங்கும் கவனிக்கப்படும் நடிகராக, மாதவன் மாறியிருந்தார். இப்படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. மாதவனின் அழுத்தத்தால், தான் இடம் பெற்ற காட்சிகள், படத்தில் குறைக்கப்பட்டதாக, அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். படம், வணிகரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதே ஆண்டு, கவுதம் இப்படத்தை ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் என்ற பெயரில், 'ரீமேக்' செய்தார். அதிலும், மாதவனே நடித்திருந்தார்.
ரசிக்க வைத்தது, மின்னலே!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

, Minnale , Madhavan , Reema Sen , Gautham Menon , Harris Jayaraj , Tamil Cinema News , Tamil Cinema , Tamil Movies , Tamil Film , Kollywood , Tamil News , Tamil Actors Gallery , Tamil Actress Gallery , Tamil Actor Wallpapers , Tamil Actress Wallpapers , Tamil Movie News , Tamil Movie Reviews , Cinema Video Clips , Tamil Cinema Latest News , Kollywood Latest News , Tamil Movie Latest News , மாதவன் , ரீமா சென் , கௌதம் மேனன் , ஹாரிஸ் ஜெயராஜ் , தமிழ் சினிமா செய்தி , தமிழ் சினிமா , தமிழ் திரைப்படங்கள் , தமிழ் படம் , தமிழ் செய்தி , தமிழ் நடிகர்கள் கேலரி , தமிழ் நடிகை கேலரி , தமிழ் நடிகர் வால்பேப்பர்கள் , தமிழ் நடிகை வால்பேப்பர்கள் , தமிழ் திரைப்படம் செய்தி , தமிழ் திரைப்படம் மதிப்புரைகள் , சினிமா காணொளி கிளிப்புகள் , தமிழ் சினிமா சமீபத்தியது செய்தி , தமிழ் திரைப்படம் சமீபத்தியது செய்தி ,

© 2025 Vimarsana