மறக்க முட&#x

மறக்க முடியுமா? - ஐயா - Marakka Mudiyuma : Aiyya


மறக்க முடியுமா? - ஐயா
27 பிப், 2021 - 21:07 IST
0 கருத்துகள்  à®•ருத்தைப் பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : ஐயா
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சரத்குமார், நயன்தாரா, நெப்போலியன், பிரகாஷ்ராஜ்
இயக்கம் : ஹரி
தயாரிப்பு : கவிதாலயா
தமிழ் வழியே இயக்குனரான ஹரி, சாமி படத்தில் அதிரிபுதிரி, ஹிட் அடித்தார். அடுத்து இயக்கிய, ஐயா படத்தில், அமைதியான வெற்றியை பெற்றார். இக்கதை, ரஜினிக்காக உருவாக்கப்பட்டது. சில காரணங்களால், அவர் நடிக்க மறுக்க, சரத்குமார், உள்ளேன் ஐயா என, நுழைந்தார்.
திருநெல்வேலியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், சரத்குமார் இரட்டை வேடத்தில் கலக்கியிருந்தார். கடந்த, 1970-களில் நடப்பதாக கதை துவங்குகிறது. சரத்குமாரும், நெப்போலியனும் நண்பர்கள். அக்காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாட, எம்.எல்.ஏ.,வான, ஓ.ஏ.கே.சுந்தர், மக்களுக்காக அரசு கொடுத்த அரிசியை பதுக்கி வைக்கிறார். இது தொடர்பான பிரச்னையில் சுந்தரை, சரத்குமார் கொல்கிறார். அவரின் மகனான பிரகாஷ்ராஜ், தன் தந்தையின் கொலைக்கு பழிவாங்க காத்திருக்கிறார். தன் நயவஞ்சகத்தால் நெப்போலியனை, சரத்குமாருக்கு எதிராக திருப்பி விடுகிறார். அதிலிருந்து சரத்குமார் மீண்டாரா, கொலை செய்ததற்கான தண்டனையை அனுபவித்தாரா என்பது தான், திரைக்கதை.
ஏரியை துார் வார, சரத்குமார் கணக்கு சொல்லும் காட்சி, பிரகாஷ்ராஜ் இறந்தது போல நடிக்கும் காட்சிகள், ரசிக்க செய்தன. இப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார், நடிகை நயன்தாரா. குடும்ப பாங்கான நயன்தாராவை, தமிழக மக்கள் வரவேற்றனர். கதாநாயகியாக முதலில் நடிக்கவிருந்தது, ஜோதிகா. பிரகாஷ்ராஜின் வில்லத்தனமும், கிளைமேக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனமும், கைத்தட்டல் பெற்றது. வடிவேலுவின் நகைச்சுவை, படத்திற்கு பலம் சேர்த்தது. பரத்வாஜ் இசையில், ஒரு வார்த்தை பேச, அய்யாத்துரை நீ பல்லாண்டு... உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க செய்தன.
குடும்பத்துடன் பார்க்க, ஐயா அழகானவர்!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

, Aiyyamovie , Sarath Kumar , Nayanthara , Director Hari , Tamil Cinema News , Tamil Cinema , Tamil Movies , Tamil Film , Kollywood , Tamil News , Tamil Actors Gallery , Tamil Actress Gallery , Tamil Actor Wallpapers , Tamil Actress Wallpapers , Tamil Movie News , Tamil Movie Reviews , Cinema Video Clips , Tamil Cinema Latest News , Kollywood Latest News , Tamil Movie Latest News , சரத் குமார் , இயக்குனர் ஹரி , தமிழ் சினிமா செய்தி , தமிழ் சினிமா , தமிழ் திரைப்படங்கள் , தமிழ் படம் , தமிழ் செய்தி , தமிழ் நடிகர்கள் கேலரி , தமிழ் நடிகை கேலரி , தமிழ் நடிகர் வால்பேப்பர்கள் , தமிழ் நடிகை வால்பேப்பர்கள் , தமிழ் திரைப்படம் செய்தி , தமிழ் திரைப்படம் மதிப்புரைகள் , சினிமா காணொளி கிளிப்புகள் , தமிழ் சினிமா சமீபத்தியது செய்தி , தமிழ் திரைப்படம் சமீபத்தியது செய்தி ,

© 2025 Vimarsana