ராஜ்யசபா &#x

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் பலே குஸ்தி


 
Advertisement
சென்னை : தி.மு.க.,வில், மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிகளை கைப்பற்றுவதற்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும், இளைஞர் அணி நிர்வாகிகளிடமும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமதுஜான், சட்டசபை தேர்தலுக்கு முன் மரணம் அடைந்தார். கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றதால்,
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
சென்னை : தி.மு.க.,வில், மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிகளை கைப்பற்றுவதற்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும், இளைஞர் அணி நிர்வாகிகளிடமும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமதுஜான், சட்டசபை தேர்தலுக்கு முன் மரணம் அடைந்தார். கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றதால், தங்களின் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால், தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா எம்.பி., இடங்கள் காலியாக உள்ளன. இந்த மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில், தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க., - எம்.பி.,க்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர். இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், எம்.பி., பதவியை பிடிக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள், இளைஞர் அணியினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி., பதவியை பெற, தி.மு.க., மூத்த நிர்வாகிகளான கம்பம் செல்வேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொங்கலுார் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது. இளைஞர் அணி தரப்பில் இருந்து புதுக்கோட்டை அப்துல்லா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி மகன் முத்து, அண்ணாநகர் கார்த்திக் போன்றவர்கள், எம்.பி., பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., சார்பிலும், ஒரு எம்.பி., பதவி கேட்கப்படுகிறது. ஆனால், அக்கட்சிக்கு எம்.பி., பதவி வழங்க தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. இதனால், மூன்று பதவிகளையும் தி.மு.க.,வே எடுத்துக்கொள்ளும் என, தெரிகிறது.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Namakkal , Tamil Nadu , India , Madras , Rajya Sabha , Pudukkottai Abdullah , Subbulakshmi Jagadeesan , Anna Nagar Karthik , , Namakkal District , நமக்கல் , தமிழ் நாடு , இந்தியா , மெட்ராஸ் , ராஜ்யா சபா , சுபிபுலக்ஷ்மி ஜெகதீசன் , நமக்கல் மாவட்டம் ,

© 2025 Vimarsana