ஒன்றியம் &#x

ஒன்றியம் சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை!


Advertisement
இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில், என் கடமைகளை உண்மையாகவும், மனச்சான்றின்படியும் ஆற்றுவேன்...' - இப்படி உறுதிமொழி எடுத்து தான், புதுச்சேரியில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தமிழகத்தின் தி.மு.க., அரசும், அமைச்சர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி, அது பெரும் விவாதமாக
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில், என் கடமைகளை உண்மையாகவும், மனச்சான்றின்படியும் ஆற்றுவேன்...' - இப்படி உறுதிமொழி எடுத்து தான், புதுச்சேரியில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தமிழகத்தின் தி.மு.க., அரசும், அமைச்சர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி, அது பெரும் விவாதமாக மாறி விட்டது.
திடீர் சர்ச்சை :
மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை, தமிழக பா.ஜ., தலைவர்களும், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர்கள், 'இந்திய ஒன்றியத்தின்' என குறிப்பிட்டு, பதவி ஏற்றது, திடீர் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தான், இப்படி கூற வைத்து, பதவி ஏற்க செய்துள்ளார் என்பதால், மொத்த எதிர்ப்பும் அவரை நோக்கி திரும்பியுள்ளது.
மொழிபெயர்ப்பு :
உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, நம் நாளிதழுக்கு, தமிழிசை அளித்த சிறப்பு பேட்டி: புதுச்சேரியில் புதிய அரசு அமைந்து, வெகு நாட்களுக்கு பின், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. பதவியேற்பு விழாவில், எதைக்கூறி உறுதிமொழி ஏற்பது என்பது குறித்து, பழைய குறிப்புகளையும், உறுதியேற்பு ஆவணங்களையும், அதிகாரிகள் கொடுத்தனர். 'இந்திய யூனியன் டெரிடரி ஆப் புதுச்சேரி' என்ற ஆங்கில வார்த்தையை, 'இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என, மொழி பெயர்த்து இருந்தனர். இந்திய அரசின் ஆளுகையின் கீழ் இருக்கும், புதுச்சேரி யூனியன் என்பதை குறிக்கும் விதமாக, மொழி பெயர்க்கப்பட்டது சரியாக இருந்ததால், அதை அப்படியே வைத்து, பதவி ஏற்பு விழாவை நடத்த உத்தரவிட்டேன்.
அரசியல் செய்ய முயற்சி
புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பதவி ஏற்பு விழாவில் பின்பற்றப்படும் வழிமுறை தான்; எங்கும், அதை மாற்றவில்லை. அப்படி இருக்கும் போது, 'ஒன்றிய அரசு' என, மத்திய அரசை அழைத்து, தமிழகத்தில் அரசியல் செய்வதை, புதுச்சேரிக்கும் கொண்டு வந்து, சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.இப்படி பேசுகிறவர்களுக்கு, ஒன்று அரசியல் சட்டம் தெரியாமல் இருக்க வேண்டும்; இல்லை, போதுமான அளவுக்கு தமிழ் மொழியில் அறிவு இல்லாமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் தான், இந்த விஷயத்தில் என்னை இழுத்து குறை கூறுகின்றனர்.
மோசமான கலாசாரம்
'மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை தவறு என, தமிழகத்தில் விமர்சித்தவர்கள், தமிழிசை செய்துள்ள காரியத்துக்கு மட்டும் அமைதியாக இருப்பது ஏன்' எனக்கேட்டு, பலரும் வம்பு பேசுகின்றனர். எதற்கெடுத்தாலும், மத்திய அரசை வம்புக்கு இழுத்து, அரசியல் செய்யும் மோசமான கலாசாரம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் தான், தற்போது புதுச்சேரி அரசியலுக்கு உள்ளும் நுழைந்துள்ளனர்.
இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் என்ற சொற்றொடரை வைத்து, அரசியல் செய்பவர்கள், ஒரு விஷயத்தை கவனிக்க மறந்து விட்டனர். புதுச்சேரி புதிய அமைச்சர்களை, தமிழில் பதவி ஏற்கச் செய்தது, இந்த தமிழிசை தான். ஒவ்வொரு அமைச்சரும், நான் முழுமையாக உறுதிமொழியை படிக்க, அதைப் பின்பற்றி கூறி, பதவி ஏற்றனர்.
வார்த்தை விளையாட்டு
இது, பதவியேற்பு நடைமுறையில் புதிது. இதை பாராட்ட மனம் வராதவர்கள், 'இந்திய ஒன்றியத்தின்' என, சொன்னதை வைத்து, வார்த்தை விளையாட்டு நடத்துகின்றனர். உறுதிமொழியில் மத்திய அரசு என பொருள்படும்படி, எந்த வார்த்தையுமே இடம்பெறவில்லை. அப்படி இருக்கும் போது, ஒன்றியம் என்ற வார்த்தையை, மத்திய அரசோடு ஒப்பிட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி பற்றி பேசுவது, நிகழ்ச்சியையே அவமானப்படுத்துவது போன்றது.
'புரோட்டாகால்' படி, அரசியல் அமைப்பு சட்டப்படி நடந்து கொண்ட என்னை விமர்சிப்பவர்கள், பொது மனிதரான என்னை அரசியலுக்குள் இழுத்து விட்டு, தங்கள் வழக்கமான அரசியலை செய்யலாம் என, நினைக்கின்றனர்; அதையே பேசுகின்றனர். அவர்களின் லாவணி கச்சேரிகளுக்கு, வரிக்கு வரி பதிலளிக்க முடியாத சூழலில் இருக்கிறேன். காரணம்

Related Keywords

India , Telangana , Andhra Pradesh , Puducherry , Pondicherry , Tamil Nadu , , Puducherry Union , India Union Puducherry , India Union , Tamil Office , Central State , New Tamil Nadu , Puducherry Sub , Puducherry New Government , Puducherry New , Central Government , Telangana State , இந்தியா , தெலுங்கானா , ஆந்திரா பிரதேஷ் , புதுச்சேரி , பொந்டிசேர்றிி , தமிழ் நாடு , புதுச்சேரி தொழிற்சங்கம் , இந்தியா தொழிற்சங்கம் , மைய நிலை , புதியது தமிழ் நாடு , புதுச்சேரி புதியது அரசு , மைய அரசு , தெலுங்கானா நிலை ,

© 2025 Vimarsana