ஸ்ரீரங்க

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்


 
Advertisement
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பட்டாச்சாரியார்கள்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கோவில் சொத்து
ஆக்கிரமிப்பு அகற்ற
சட்ட நடவடிக்கை
சேகர்பாபு
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.
அதன் பின், அவர் கூறியதாவது: கடந்த பத்தாண்டில் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் உள்ள தமிழக கோயில்களில் ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடமுழுக்கு நடத்தாத கோயில்களின் எண்ணிக்கைகளை கண்டறிந்து, விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து, அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆட்சியில், 5 ஆண்டுகள் பணிபுரிந்த கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்று,110 விதியின் கீழ் அறிவித்தனர். போகிற போக்கில் அறிவித்துவிட்டு, செயல்படுத்தாமல் விட்டு சென்ற அந்த அறிவிப்பை, திமுக ஆட்சியில் செயல்படுத்தி உள்ளோம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்à®

Related Keywords

Srirangam , Tamil Nadu , India , , ஸ்ரீரங்கம் , தமிழ் நாடு , இந்தியா ,

© 2025 Vimarsana