"நல்லவேளை &#

"நல்லவேளை கர்நாடகாவில் காங்., ஆட்சி இல்லை. இருந்திருந்தால் குரல் மாறுபட்டு ஒலித்திருக்கும்..."


Advertisement
ஒரு நதி, ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காக, அந்த நதி, அந்த மாநிலத்திற்கு மட்டும் தான் சொந்தம் என கூற முடியாது. அந்த மாநிலத்திற்கு உரிய தண்ணீர் பங்கை மட்டுமே பெற முடியும். அந்த வகையில், கர்நாடகா, காவிரி நதி மீது சொந்தம் கொண்டாட முடியாது.- தமிழக காங்., தலைவர் அழகிரி'நல்லவேளை கர்நாடகாவில் காங்., ஆட்சியில்லை. அப்படி இருந்திருந்தால், காங்., தலைவர் குரல் மாறுபட்டு
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
ஒரு நதி, ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காக, அந்த நதி, அந்த மாநிலத்திற்கு மட்டும் தான் சொந்தம் என கூற முடியாது. அந்த மாநிலத்திற்கு உரிய தண்ணீர் பங்கை மட்டுமே பெற முடியும். அந்த வகையில், கர்நாடகா, காவிரி நதி மீது சொந்தம் கொண்டாட முடியாது.
- தமிழக காங்., தலைவர் அழகிரி
'நல்லவேளை கர்நாடகாவில் காங்., ஆட்சியில்லை. அப்படி இருந்திருந்தால், காங்., தலைவர் குரல் மாறுபட்டு ஒலித்திருக்கும்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேச்சு
'நீட்' தேர்வு விவகாரத்தில் அப்பாவி மாணவர்களை, அரசியல் கட்சிகள் வஞ்சிக்கக் கூடாது. தேர்வு நடத்தினால், எழுதுவதற்கு தயாராக இருக்கும் மாணவர்களையும், பெற்றோரையும் அரசியலுக்காக குழப்புவது நல்லதல்ல.
- த.மா.கா., தலைவர் வாசன்
'விரும்புபவர்கள் 'நீட்' தேர்வு எழுதலாம் என சொல்வதை தடுக்கும் அரசியல் காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்கிறீர்கள்; பாராட்டுகள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி
மத்திய அரசு தொடர்ந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறும் வரை, காங்கிரஸ் போராட்டம் ஓயாது.
- திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்
'காங்., போராட்டம் ஓயாது என கூறி, வீட்டுக்குள் இருந்த தலைவர்களை வீதியில் நிற்க வைப்பது தான் உங்கள் எண்ணமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேச்சு
அ.தி.மு.க., என்பது ஆலமரம் போன்றது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது இந்த இயக்கம். அழிவே கிடையாது. வளர்ந்து கொண்டே இருக்கும்.
- அ.தி.மு.க.,வின் வளர்மதி
'நல்லவேளை உங்களின் வழித்தோன்றல் லியோனி பாஷையில் பேசாமல், ஆலமரம் அப்படி இப்படின்னு பேசியது வரைக்கும் நன்றி...' என, கூறத் தோன்றும் வகையில், பாட நுால் கழக முன்னாள் தலைவர், அ.தி.மு.க.,வின் வளர்மதி பேச்சு
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டியல் இனத்தவரை, துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். இப்போது, கவர்னரிடமும் கோரியுள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் இருந்திருக்க மாட்டார்களோ என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி
பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து, தன் சொந்த கருத்தை கூறிய முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., எங்களுக்கு உத்தரவிட முடியாது. அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும்; நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.
- தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்
'பா.ஜ., பற்றி கூறினால், அந்த கட்சியினர் தானே குரல் கொடுப்பர்... எனவே, பா.ஜ.,வினர் குரலை முடக்காதீர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, சிறப்பு உணவுப்பொருள் பெட்டி, அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும்.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
'நம் தமிழகத்தில் சொல்வது போல, 'விடுமுறை நாள்' என சொல்லாமல், திருவோணத் திருநாள் என, கம்யூ.,க்கள் கொண்டாடுகின்றனரே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை
இந்தியாவில் தொழில்கள் சிறப்பாக நடக்காமல் வருமானம் இல்லை. தொழில்கள் மீது வரி விதிக்க முடியாததால் அரசு கஜானா காலியாகி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தி 130 கோடி மக்கள் மீது வரிச்சுமையை வைத்துள்ளனர்.
- காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'கஜானாவை நிரப்ப வேண்டாம்; கொஞ்சமாவது சேர வேண்டும் அல்லவா, அதற்காகத் தான், இந்த விலை உயர்வாக இருக்குமோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி
காவிரியில் தண்ணீரை பெற்று தர கூடிய உரிமையும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்குமான பொறுப்பும், காவிரி மேலாண்மை ஆணைய தà®

Related Keywords

India , Cauvery River , India General , Kerala , Karnataka Cong , Pinarayi Vijayan , Trichy Cong , Thirumavalavan Office , Central Government , High Central Government , Secretary Saturday , Fisheries Secretary , Vijayan Report , India Jobs , Government Treasury , General Secretary Pandya , இந்தியா , காவிரி நதி , கேரள , கர்நாடகா காங் , பிணாராயி விஜயன் , மைய அரசு , மீன்வளம் செயலாளர் , இந்தியா வேலைகள் , அரசு கருவூலம் ,

© 2025 Vimarsana