பேரழிவுக

பேரழிவுக்கு வழி வகுக்கும்: நீதிமன்றம் எச்சரிக்கை


 
Advertisement
புதுடில்லி-'பரிசோதனைகள் செய்யப்படாமல், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்' என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மைனர் சிறுவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரசின் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
புதுடில்லி-'பரிசோதனைகள் செய்யப்படாமல், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்' என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மைனர் சிறுவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரசின் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே அதற்குள், 12 - 17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு தடுப்பூசியை உடனடியாக செலுத்த, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கொள்கைகள்இந்த மனு, நீதிபதிகள் படேல் மற்றும் ஜோதி சிங் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நம் நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசியின் பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் குழந்தைகளுக்கு செலுத்தப்படும்' என்றார்.
இதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தடுப்பூசி பரிசோதனைகள் முடியட்டும்; பரிசோதனைகளை முறையாக செய்யாமல் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தினால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்.பரிசோதனைகள் முடிந்தபின் குழந்தைகளுக்கு உடனே செலுத்தப்பட வேண்டும். அதை எதிர்நோக்கியே பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டது.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

New Delhi , Delhi , India , , Court Warning , Young , Torch Singh , புதியது டெல்ஹி , டெல்ஹி , இந்தியா , இளம் ,

© 2025 Vimarsana