நூலகங்கள

நூலகங்கள் மீண்டும் திறப்பு: வாசகர்களுக்கு கட்டுப்பாடு


 
Advertisement
சென்னை-தமிழகம் முழுதும் நுாலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதியும், கொரோனா நோய் குறைந்து வருவதாலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து நுாலகங்களும் செயல்படத் துவங்கின.நுாலகங்களில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
சென்னை-தமிழகம் முழுதும் நுாலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதியும், கொரோனா நோய் குறைந்து வருவதாலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து நுாலகங்களும் செயல்படத் துவங்கின.
நுாலகங்களில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விபரம்: தினமும் நுாலகங்களை மூடுவதற்கு முன், வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நுால்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை, கிருமி நாசினியால் முழுமையாக துாய்மைப்படுத்த வேண்டும் அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தவறாமல்பின்பற்ற வேண்டும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நுாலகங்களை திறக்க அனுமதி இல்லை
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பிணியர், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்,நுாலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் நுாலகத்திற்கு வருவோர், கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக, நுழைவுவாயிலில் சோப், தண்ணீர் அல்லது கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும் வாசகர்கள் இரவல் பெற்ற நுால்களை திரும்ப அளிக்கும் போது, அவற்றை தனியே சேகரித்து வைத்து, கிருமி நாசினியால் முழுமையாக சுத்தப்படுத்திய பின், அடுக்கி வைக்க வேண்டும். மாவட்ட நுாலக அலுவலர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, வாரம் ஒரு முறை நுாலகம் மற்றும் நுாலக வளாகத்தை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசு கூறியுள்ளது.

Related Keywords

, Used Seats , Stack Place ,

© 2025 Vimarsana