ஆன்லைன் ர&#x

ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தகவல்


 
Advertisement
சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில், 'ஆன்லைன் ரம்மி, போக்கர்' போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், 'ஆன்லைன் ரம்மி, போக்கர்' போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இம்மனுக்களை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஏ.கே.கங்குலி, அபிஷேக்மனு சிங்வி, அரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் வாதாடினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டும் தடை விதித்து, சட்டம் இயற்றி உள்ளதாகவும், இதில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்; தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பொது நலன் கருதியே, இந்த சட்டம் இயற்றப்பட்டது,'' என்றார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, முதல் பெஞ்ச் நேற்று (ஆக.,03) பிறப்பித்தது. அதில், 'முறைப்படுத்துவதற்கு உரிய விதிகள் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது. உரிய காரணங்களை தெரிவிக்காமல் பிறப்பிக்கப்பட்ட, இந்தச் சட்டம் செல்லத்தக்கது அல்ல' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், 'உரிய விதிகளுடன், புதிய சட்டம் இயற்ற அரசுக்கு தடை ஏதும் இல்லை' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு தாமதமின்றி தடை செய்யப்படும். பொதுநலன் மிகவும் முக்கியம் என்பதால் உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களுடன் சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுக்கு இணங்க, புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செயà¯

Related Keywords

Madras , Tamil Nadu , India , Justice Banerjee , Senthil Ramamurthy , , New Law , Secretary Raghupati , Chief Justice Banerjee , Advocate General , மெட்ராஸ் , தமிழ் நாடு , இந்தியா , நீதி பானர்ஜி , செந்தில் ராமமூர்த்தி , புதியது சட்டம் , தலைமை நீதி பானர்ஜி , வழக்கறிஞர் ஜநரல் ,

© 2025 Vimarsana