இயற்கையை &#x

இயற்கையை அழித்து வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்


By DIN  |  
Published on : 15th July 2021 11:41 PM  |   அ+அ அ-   |  
  |  
உயர்நீதிமன்றம்
இயற்கையை அழித்து வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் படூா் கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூா் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்பி வருகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த வட்டாட்சியருக்கு , வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா். அந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீா் நிலைகளை அரசு ஆக்கிரமிக்கக் கூடாது. நீா் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதிலாக மேல்நிலை சாலை அமைக்கலாம். இயற்கையை அழித்து வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினா். பின்னா், மனு தொடா்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
O

Related Keywords

Madras , Tamil Nadu , India , Justice Sanjeev , Government Court , Development Corporation , Old Mamallapuram Road , Tamil Nadu Road Development Corporation , Chief Justice Sanjeev , மெட்ராஸ் , தமிழ் நாடு , இந்தியா , நீதி சஞ்சீவ் , அரசு நீதிமன்றம் , வளர்ச்சி நிறுவனம் , பழையது மாமல்லபுரம் சாலை , தமிழ் நாடு சாலை வளர்ச்சி நிறுவனம் ,

© 2025 Vimarsana