ஐஎன்எக்ஸ

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


By DIN  |  
Published on : 23rd June 2021 03:16 AM  |   அ+அ அ-   |  
  |  
 
தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடா்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்துக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கின் அடுத்த விசாரணையை தில்லி சிறப்பு நீதிமன்றம் வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். கரோனா காலகட்டத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் கடந்த 2007-ஆம் ஆண்டு பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து கடந்த 2019-இல் சிபிஐயும், அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தைக் கைது செய்தன. பின்னா், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இதேபோன்று, காா்த்தி சிதம்பரமும் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, மாா்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
O

Related Keywords

Delhi , India , New Delhi , , Central Finance Ministry , It Enforcement Department , Enforcement Department , Delhi Special Court , New Delhi Special Court , Special Court , Nagpal Tuesday , Investment Promotion Board , டெல்ஹி , இந்தியா , புதியது டெல்ஹி , அமலாக்கம் துறை , டெல்ஹி சிறப்பு நீதிமன்றம் , சிறப்பு நீதிமன்றம் , முதலீடு ப்ரமோஶந் பலகை ,

© 2025 Vimarsana