Print மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 171 புள்ளிகள் உயர்வடைந்து 52,419 புள்ளிகளாக உள்ளது. பதிவு: ஜூன் 18, 2021 09:55 AM மும்பை, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 171 புள்ளிகள் உயர்வடைந்து 52,419.03 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,697.25 புள்ளிகளாக உள்ளது. இவற்றில் பஜாஜ் பின்செர்வ், இன்போசிஸ், எச்.சி.எல். டெக், டி.சி.எஸ்., சன் பார்மா, எச்.யூ.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் சென்செக்ஸ் மதிப்பில் லாப நோக்குடன் காணப்படுகின்றன. எனினும், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., எல் அண்டு டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, வங்கி துறைகளில் எஸ்.பி.ஐ. மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வர்த்தகத்தில் சரிவை கண்டுள்ளன. தொடர்புடைய செய்திகள் 1.