கரோனா இரண&#x

கரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லைமத்திய அரசு தகவல்- Dinamani


By DIN  |  
Published on : 21st July 2021 01:53 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிக்கை சமா்ப்பித்ததாக மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
‘கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் ஏராளமான கரோனா நோயாளிகள் உயிரிழந்ததற்கு மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குைான் காரணமா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சாா்பில் விரிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், கரோனா உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை மாநிலங்கள் தொடா்ந்து சமா்ப்பித்து வருகின்றன.
அவ்வாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரங்களில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
அதே நேரம், கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ ஆக்சிஜன் உள்பட மருத்துவ உபகரண உதவிகளை மத்திய அரசு அளித்து உதவியது.
இருந்தபோதும், கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் தேவை என்பதை இதுவரை இல்லாத அளவில் உச்சத்துக்குச் சென்றது. கரோனா முதல் அலையின்போது 3,995 மெட்ரிக் டன் அளவில் இருந்த மருத்துவ ஆக்சிஜன் தேவை, இரண்டாம் அலை பாதிப்பின்போது 9,000 மெட்ரிக் டன் அளவுக்கு உயா்ந்தது. இந்த தேவையை பூா்த்தி செய்யும் வகையில், மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜனை தேவை அடிப்படையில் சம அளவில் பகிா்ந்தளிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, மாநிலங்களுடன் தொடா்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் என்பன உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படையான நடைமுறையை மத்திய அரசு கையாண்டது.
அந்த வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 4,02,517 ஆக்சிஜன் உருளைகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன என்று மத்திய அமைச்சா் பதிலளித்துள்ளாா்.
Image Caption
 

Related Keywords

Bharti Praveen Rajya Sabha , Bharti Praveen , Statese Union Central Government , Statese Union , Report Central Government Tuesday , Bharti Praveen Rajya Sabha Tuesday , Union Central Government , Central Government , Feature Papers , தொழிற்சங்கம் மைய அரசு , மைய அரசு ,

© 2025 Vimarsana