Print ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பதிவு: ஜூலை 10, 2021 06:18 AM சிவகங்கை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 10 ஆயிரத்து 839 ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.. இவற்றில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற 15-வது நிதிக்குழு மூலம் ரூ.4 ஆயிரத்து 679 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய்களுக்குரிய மருந்து இருப்பு உள்ளது. இன்னும் 6 மாதத்தில் ஒரு கோடி பேருக்கு தேவையான அளவு மருந்து தயார் நிலையில் வைக்கப்படும். ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தற்போது குணமடைந்துள்ளார். வைரஸ்கள் பல்வேறு வடிவில் வரும் நிலையில் அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புற்று நோய் சிகிச்சைக்கென பிரத்தியேக சிகிச்சை மையங்களை மாவட்டந்தோறும் தொடங்க உள்ளோம் அதேபோல் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை பிரமாண்டமாக விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புடைய செய்திகள் 1. பெட்ரோல், எரிவாயு விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என்று மத்திய அரசுக்கு, நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 2. டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வீரியமிக்கது என்றாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். 3. கொரோனா பற்றிய அச்சத்தாலும் மக்கள் உயிரிழப்பதாக உத்தரபிரதேச மாநில மருத்துவக் கல்வி மந்திரி சுரேஷ் கன்னா தெரிவித்தார். 4. புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 5. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 3-வது நாளாக நேற்றும் ‘ரெம்டெசிவிர்' மருந்து வினியோகம் நடைபெற்றது. இதனை வாங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்தனர். ஆசிரியரின் தேர்வுகள்... 1. 2. 3. 4. 5.