Print உண்மையை மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மறக்கலாம். ஆனால், வேதனையை தாங்கிய மக்கள் மறக்க மாட்டார்கள் என பிரியங்கா கூறியுள்ளார். பதிவு: ஜூலை 17, 2021 08:25 AM புதுடெல்லி, பிரதமர் மோடி நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு வளர்ச்சித்திட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியதாக யோகி ஆதித்யநாத் அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா இரண்டாவது அலையின்போது யோகி ஆதித்யநாத் அரசு இழைத்த கொடுமைகள், அலட்சியம், தவறான நிர்வாகம் ஆகியவை பற்றிய உண்மைகளை மோடியின் நற்சான்றிதழால் மறைத்துவிட முடியாது. மக்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளனர். இந்த உண்மையை மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மறக்கலாம். ஆனால், வேதனையை தாங்கிய மக்கள் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்புடைய செய்திகள் 1. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சாதாரண மக்களுக்கு மிகப்பெரும் சுமையாக மாறி வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெறுமாறும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. 2. கொரோனா பாதிப்பு, மரணம் தொடர்பான உண்மையான தகவல்களை மத்திய அரசு மறைத்து வருகிறது. மோடியின் கவுரவத்தை காப்பாற்றவே முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். 3. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 4. தடுப்பூசி திருவிழா நடத்திய மோடி அரசு, போதிய தடுப்பூசிகள் அளிக்காததால், தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று பிரியங்கா குற்றம் சாட்டினார். 5. டெல்லியில் பிரமாண்ட மத்திய செயலகம், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லங்கள் ஆகியவை ரூ.13 ஆயிரத்து 450 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஆசிரியரின் தேர்வுகள்... 1. 2. 3. 4. 5.