Re-opening of Yatri Niwas for devotees in Srirangam  |&

Re-opening of Yatri Niwas for devotees in Srirangam  | ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்காக மீண்டும் யாத்ரி நிவாஸ் திறப்பு


Colors:
பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
10:25
 திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்குவதற்காக, நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில், 1,000 பேர் தங்கும் வகையில், யாத்ரி நிவாஸ் விடுதி கட்டப்பட்டு உள்ளது. கொரானோ தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த விடுதியில், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது, கொரோனா தொற்று பரவல் குறைந்து, வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று, யாத்ரி நிவாஸில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் தலைமையில், தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று முதல் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுதியில் தங்குவதற்கு, Srirangam.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம், என, இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.

Related Keywords

Trichy , Tamil Nadu , India , Srirangam , Tanvantiri Homa , , Commissioner Marimuttu , திருச்சி , தமிழ் நாடு , இந்தியா , ஸ்ரீரங்கம் ,

© 2025 Vimarsana