இயக்குனர

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து || Tamil cinema Director shankar daughter wedding


Send
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். 
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித் தம்பதி
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
Related Tags :

Related Keywords

Madras , Tamil Nadu , India , Stalin Aishwarya Shankar Rohit , Aishwarya Shankar Rohit , Young , Madras East Beach , Shankar , Ishwarya Shankar Wedding , Lohit , மெட்ராஸ் , தமிழ் நாடு , இந்தியா , இளம் , ஷங்கர் ,

© 2025 Vimarsana