10 Jul 2021 05:30 மும்பை: “தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர், ஆனால் உண்மையில் அதுதான் நடக்கிறது,” என மகாராஷ்டிர மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். உலக அளவில அதிகமாக தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. எனினும் இந்தியாவில் தடுப்பூசி தேவைக்கு ஏற்ப விநியோகம் இல்லை என்ற புகார் தொடர்ந்து எழுப்பட்டு வருகிறது. “தடுப்பூசி தொடர்பாக பல்வேறு புள்ளி விவரங்களை மத்திய அரசு கூறி வந்தாலும் நடைமுறை வேறு மாதிரியாக உள்ளது. மாநிலங்களில் கள நிலவரம் மற்றொரு விதமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. தடுப்பூசி இல்லாததால் முகாம்கள் நிறுத்தப்படுகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோருக்கு தடுப்பூசி இல்லாத நிலை ஏற்படக் கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கவனத்துடன் இருக்க வேண்டும்,” என்றார் திரு நவாப் மாலிக். அண்மைய காணொளிகள் 13:09