இந்து அறக்கட்டளை வாரிய இயக்குநர் மீது தாக்குதல் உடலில் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ராமச்சந்திரனின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.படம்: இணையம் 25 Jul 2021 05:30 ஜார்ஜ் டவுன்: பினாங்கு இந்து அறக்கட்டளை வாரிய நிர்வாக இயக்குநர் எம்.ராமச்சந்திரன் அடையாளம் தெரியாதவர்களால் நேற்று தாக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் தனது காரில் இருந்து இறங்கியவுடன், அவரை அடையாளம் தெரியாத சிலர் தாக்கினர். 70 வயதான ராமச்சந்திரனின் உடலில் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாங்கு துணை முதல்வரும் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி இந்த விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “ராமச்சந்திரன் மீதான இத் தாக்குதல் பினாங்கு அரசாங்கத் திற்கு எதிரான தாக்குதலாகும்,” என்று கண்டித்த ராமசாமி, இதைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவேன் என்றார். அண்மைய காணொளிகள் 08:58 10:51 09:27 12:21