`30 ஆண்டுகள்

`30 ஆண்டுகள் ஆகிவிட்டது, மகிழ்ச்சி; ஆனால்..!' - தாராளமயமாக்கலை நினைவுகூரும் மன்மோகன் சிங் | The road ahead is more daunting than the 1991 crisis says Manmohan Singh


24 Jul 2021 9 AM
`30 ஆண்டுகள் ஆகிவிட்டன, மகிழ்ச்சி; ஆனால்..!’ - தாராளமயமாக்கலை நினைவுகூரும் மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
1991-ல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் வறுமையில் தவித்த  மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், இனி வரும் வளர்ச்சிப் பாதை, 1991 பொருளாதார நெருக்கடி காலகட்டத்தைக் காட்டிலும் மோசமாக இருப்பதாக எச்சரித்திருக்கிறார்.
1991-ல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்றபோது, பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்குக்கு அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருந்தது. அதனால், இந்திய தேசத்தைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, கரை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மன்மோகன் சிங்குக்கு இருந்தன. பதவியேற்ற கையோடு, சில வாரங்களில் மன்மோகன் சிங் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது.
விக்டர் ஹ்யூகோவின், `ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டதென்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது’ என்ற புகழ்பெற்ற தத்துவத்தை அவையில் முன்மொழிந்துவிட்டு, காங்கிரஸின் தூண்களான ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, நேரு ஆகியோர் மேற்கொள்ளாத மாபெரும் சீர்திருத்த நடவடிக்கையை மன்மோகன் சிங் அறிவித்தார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரே வழி நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைப்பது மட்டும்தான் என்று கூறிவிட்டு, புதிய பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தார்.
நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங்
1991-ல் மன்மோகன் சிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்தன. மக்கள் வாழ்வாதாரத்திலும், தொழில்துறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. மேலும், இந்தியாவின் உற்பத்தி, சேவை, தகவல் தொழில்நுட்பத் துறைகள் உள்ளிட்டவை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டன. மன்மோகன் சிங்கின் பொருளாதார தாராளமய நடவடிக்கை இன்று வரையிலும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகப் பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்பட்டுவருகிறது.
இந்தநிலையில், பொருளாதார தாராளமயக் கொள்கையின் மூலம் இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அதை நினைவுகூர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ``இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களை நோய்த்தொற்றிடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவுகூர்கிறேன்.
உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!
Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
Also Read
அப்போது என்னுடைய முதல் பட்ஜெட் உரையில் நான், விக்டர் ஹ்யூகோவின், `ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டதென்றால், உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது’ என்ற புகழ்பெற்ற தத்துவத்தை அவையில் முன்மொழிந்திருந்தேன். ஆனால், இன்று 30 வருடங்களுக்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் கொரோனா தொற்றால் சமீபகாலத்தில், நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தமடைகிறேன். அதேபோல், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது, சுகாதாரம், கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம்.
பொருளாதார வளர்ச்சி
இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 ட்ரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. ஆராய்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய நேரம். தற்போதைய பொருளாதாரச் சூ

Related Keywords

India , Rajiv Gandhi , Indira Gandhie Nehru , Manmohan Singh , Energy It , Narasimha Rao , Finance Secretary Office , India Economist , Congressional Rajiv Gandhi , Indira Gandhi , Great Reform , New Economist , இந்தியா , ராஜீவ் காந்தி , ம்யாந்‌மோஹாந் சிங் , ஆற்றல் அது , நரசிம்ம ராவ் , இந்தியா பொருளாதார நிபுணர் , இந்திரா காந்தி , நன்று சீர்திருத்தம் , புதியது பொருளாதார நிபுணர் ,

© 2025 Vimarsana