தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.