When are the schools opening in Tamil Nadu? - Information fr

When are the schools opening in Tamil Nadu? - Information from the Minister of School Education || தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?


Print
மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூன்
27, 
2021
13:02
PM
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும்,கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்து வரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில்,முதலாவதாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் ,அதன்பின்னர் படிப்படியாக பிற மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான அரசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
பிளஸ் 2  வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி,  பிளஸ் 2  முடித்த மாணவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.
மேலும்,கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனால், கொரோனா 3 வது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிக்காட்டல்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் மற்றும் முதல்-அமைச்சரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
ஆசிரியரின் தேர்வுகள்...
1.
2.
3.
4.
5.

Related Keywords

Trichy , Tamil Nadu , India , Madras , , School Education , India Medicare Research Council , School Education Dept , School Education Secretary , Queen Official Notice , Chief Minister , தம ழகத த ல பள ள கள றப ப எப க கல வ ற அம ச சர தகவல Information From The Minister Of School Education , திருச்சி , தமிழ் நாடு , இந்தியா , மெட்ராஸ் , பள்ளி கல்வி , பள்ளி கல்வி டெபிட் , பள்ளி கல்வி செயலாளர் , தலைமை அமைச்சர் ,

© 2025 Vimarsana