vimarsana.com


Advertisement
'ஜெய்ஹிந்த்' தமிழ் வார்த்தையல்ல என்பதால், அதை சொல்ல தேவையில்லை என்கிறார், தமிழக அமைச்சர் பொன்முடி. அப்படியானால் திராவிடம், ஸ்டாலின் போன்ற வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவற்றை சொல்லக் கூடாது என்பீர்களா?- பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி'எப்படி சார் இப்படி... வழக்கறிஞராக மாறியிருந்தால், பெரிய வழக்குகளை எல்லாம் அருமையாக முடித்து
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
'ஜெய்ஹிந்த்' தமிழ் வார்த்தையல்ல என்பதால், அதை சொல்ல தேவையில்லை என்கிறார், தமிழக அமைச்சர் பொன்முடி. அப்படியானால் திராவிடம், ஸ்டாலின் போன்ற வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவற்றை சொல்லக் கூடாது என்பீர்களா?
- பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'எப்படி சார் இப்படி... வழக்கறிஞராக மாறியிருந்தால், பெரிய வழக்குகளை எல்லாம் அருமையாக முடித்து வைத்திருப்பீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
மத்திய அரசு புதிதாக அமித் ஷாவின் தலைமையில் கூட்டுறவு துறை என்ற துறையை உருவாக்கி இருக்கிறது. இது, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் மற்றொரு முயற்சி.
- தமிழக சிறுபான்மை கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
'அதை ஏன் தவறாக பார்க்கிறீர்கள்... மத்திய - மாநில அரசுகளின் கூட்டுறவுக்கான துறையாக இருக்கலாமே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மை கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
மார்க்கண்டேய நதியின் குறுக்கில் அணை கட்டுவதற்கு காரணம், அ.தி.மு.க., அரசு தான். அணை கட்ட ஜல்லி, எம்.சாண்ட் கொடுத்ததே இங்குள்ள அ.தி.மு.க.,வினர் தான். எனவே அந்த அணையை இடித்தே தீர வேண்டும்.
- தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன்
'இப்போது இதை சொல்லும் நீங்கள், அப்போதே பிரச்னையை கிளப்பி இருந்தால், அணை கட்டி முடிக்கப்பட்டிருக்காதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் பேட்டி.
தமிழக பாடநுால் கழகத்தின் தலைவராக தி.மு.க., பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டு உள்ளார். குழந்தைகளுக்கு பாடம் தவிர்த்த, பிற விஷயங்களை அவர் நன்கு சொல்லிக் கொடுப்பார்... விசுவாசத்திற்கு மதிப்பளிக்கத் தான் வேண்டும். அதற்காக இப்படியா?
- அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்
'அவருக்கு, பின் என்ன துறை தான் கொடுக்க முடியும்... பட்டிமன்ற துறை என்ற ஒன்று இல்லையே...' என, கூறத் துாண்டும் வகையில், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் அறிக்கை.
பா.ஜ.,வால் தான் நாங்கள் தோற்றோம் என்கிறது அ.தி.மு.க., அதுபோல, அ.தி.மு.க.,வால் தான் நாங்கள் தோற்றோம் என்கிறது பா.ஜ., சரி சரி அடிச்சுக்காதீங்க. எப்படியோ தமிழகத்திற்கு நல்லது நடந்துள்ளது.
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'அவர்கள் சண்டையில் உங்களுக்கு திருப்தி. கம்யூ.,க்களின் குசும்பு இது தான்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.
நாம் தமிழர் கட்சியையும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாது. சட்டசபை தேர்தலில் அக்கட்சி 7 சதவீத ஓட்டுகளை பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி, தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றும் என்பதை மறுப்பதற்கில்லை.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் பிரமுகர் குமாரவேல்
'ஏன், 3 சதவீத ஓட்டு கூட வாங்காத கமல் கட்சியையும் தான், தமிழகத்திலிருந்து பிரிக்க முடியாது. ஓட்டுக்கும், கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படிப் பார்த்தால், அ.தி.மு.க., - தி.மு.க., மட்டும் தான் தமிழகத்தில் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் பிரமுகர் குமாரவேல் அறிக்கை.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Dindigul ,Tamil Nadu ,India ,Sumanthc Raman ,Peter Alphonse ,Amit Shaw ,Hc League ,Narayanan Tirupati Sir ,Narayanan Tirupati Report ,Central Government New Amit Shaw ,Central State States ,Peter Alphonse Report ,Dam Thira ,Sumanthc Raman Report ,திந்டிகுள் ,தமிழ் நாடு ,இந்தியா ,பீட்டர் அல்போன்ஸ் ,அமித் ஷா ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.