vimarsana.com


By DIN  |  
Published on : 14th July 2021 01:36 AM  |   அ+அ அ-   |  
  |  
நரேந்திர மோடி
தனது தொகுதியான வாராணசிக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை (ஜூலை 15) பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘உத்தர பிரதேச மாநிலம் வாராணசிக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, அங்கு ரூ.744 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளாா். அத்துடன் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 143 கிராமப்புற திட்டங்கள், மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிஐபிஇடி) திறன் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மையம் உள்ளிட்ட ரூ.839 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா். கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையினரை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தோ்தல் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரதமா் மோடி வாராணசிக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
 

Related Keywords

New York ,United States ,Varanasi ,Uttar Pradesh ,India , ,Modi Thursday ,York Thursday ,Central Engineering ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,வாரணாசி ,உத்தர் பிரதேஷ் ,இந்தியா ,மோடி வியாழன் ,யார்க் வியாழன் ,மைய பொறியியல் ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.