CBSE 10th Result 2021 LIVE: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை சற்று முன்னர் அறிவித்தது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் மாணவர்கள் இன்று தங்கள் பத்தாம் வகுப்பு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். CBSE -யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, cbse.gov.in.- ல் இன்று மாணவர்கள் 10 ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இது தவிர Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 12 ஆம் வகுப்பைப் போலவே, இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுகான தேதி மற்றும் நேரத்தை வாரியம் அறிவித்தது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் ஆன்லைனில் தங்கள் மதிப்பெண்களை காண முயற்சிப்பதால் சிலர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தங்கள் முடிவுகளை காண தாமதம் ஏற்படலாம். மதிப்பெண்களைக் காண உள்ள அனைத்து வழிகளையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்: - cbse.nic.in - ஐவிஆர்எஸ் கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, CBSE இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்தது. உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண்களை வலைத்தளத்தில் பார்ப்பதற்கான வழிமுறை: - CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbseresults.nic.in அல்லது cbse.nic.in க்குச் செல்லவும் - அடுத்த பக்கத்தில் கிளிக் செய்து, ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் தேர்வு விவரங்களை உள்ளிடவும். - விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். - உங்கள் முடிவு திரையில் டிஸ்பிளே செய்யப்படும். - எதிர்கால பயன்பாட்டுக்கு இதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!