"இன்னும் 50 ந

"இன்னும் 50 நாட்கள் காத்திருங்கள். எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்பர்..."


Advertisement
தி.மு.க., தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என, வானளாவ அளந்தனர். 50 நாட்களை கடந்து விட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது; அறிகுறியே தெரியவில்லையே! -சீமான் 'இன்னும் 50 நாட்கள் காத்திருங்கள்; எல்லாவற்றையும் சரி செய்து விடுவோம் என்பர். நம்பி தானே ஆக வேண்டும்...'
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
தி.மு.க., தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என, வானளாவ அளந்தனர். 50 நாட்களை கடந்து விட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது; அறிகுறியே தெரியவில்லையே!
-சீமான்
'இன்னும் 50 நாட்கள் காத்திருங்கள்; எல்லாவற்றையும் சரி செய்து விடுவோம் என்பர். நம்பி தானே ஆக வேண்டும்...' என, விரக்தியாக சொல்ல தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
மத்திய பா.ஜ., ஆட்சியில் அரசியல் சட்ட ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவில் குற்றம் இல்லாத இடத்தில் கூட குண்டர் சட்டம் கொண்டு வருகின்றனர். -
சவுந்தரராசன்
'மத்தியில் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும், குற்றம், குறை காண்பதே நம்மவர்களுக்கு வழக்கம். எனவே, இதுவும் அந்த ரகம் தான்...' என, சொல்ல தோன்றும் வகையில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராசன் பேச்சு
கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் மாநில அரசு தடுமாறியுள்ளது; செய்தது என்ன? உடனடியாக, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- சேகர்
'எத்தனை கலரில் வேண்டுமானாலும் அறிக்கை அளிக்க அரசு தயார் என, அவர்களின், 'மைண்ட் வாய்ஸ்' உங்களுக்கு கேட்கவில்லையா...' என, கேட்க தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை
நாட்டின் 50 சதவீத மக்களை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால், அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.,வை தோற்கடித்தோம். விரைவில் நடைபெற உள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில தேர்தல்களிலும் தோற்கடிப்போம்.
-பாலகிருஷ்ணன்
'தோற்கடிப்பீங்க சரி. அந்த தேர்தல்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்பதற்கும் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு
பெட்ரோல் விலை, பல இடங்களில் சதமடித்துள்ளது. செஞ்சுரி அடித்ததை பாராட்ட வேண்டாமா... இரவு 8:00 மணிக்கு வீடுகளில் விளக்கை அணைத்துவிட்டு, வெளியில் தீபமேற்றி, மணியடித்து, பாத்திரங்களில் ஒலியெழுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தால் என்ன?
-பீட்டர் அல்போன்ஸ்
'அதை காங்., தலைமையேற்று செய்யலாமே; அழகிரிக்கு யோசனை கூறுங்கள்... அவர் தலைமையில் காங்., தலைவர்கள் ஒன்றுபட்டு, ஒலி எழுப்பலாமே...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டாலும், காவல் துறையின் அணுகுமுறையால் அவப்பெயர் தான் உருவாகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்திய முதல்வர், காவல் துறையின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வரவும் கவனம் செலுத்த வேண்டும்.
-சண்முகம்
'காவல் துறை பெரிய அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்தது போல, போலீஸ்காரர்களையும் இடமாற்றம் செய்யலாமே; அப்படியொரு நல்ல, 'ஐடியா'வை அரசுக்கு சொல்லலாமே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் சண்முகம் பேச்சு
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியà®

Related Keywords

Uttarakhand , Uttaranchal , India , France , Tamil Nadu , Peter Alphonse , , State Government , Shekar Report , Central Government Introduction , Uttarakhand State , Secretary Balakrishnan , உத்தராகண்ட் , உத்தாரன்சல் , இந்தியா , பிரான்ஸ் , தமிழ் நாடு , பீட்டர் அல்போன்ஸ் , நிலை அரசு , உத்தராகண்ட் நிலை , செயலாளர் பாலகிருஷ்ணன் ,

© 2025 Vimarsana