இரக்கமே இ&#x

இரக்கமே இல்லாத இதயம் அறக்கட்டளை சிவகுமார்! குழந்தைகளை விற்ற கொடூரன்: வாங்கிய 2 தம்பதியர் உட்பட 7 பேர் கைது


Advertisement
மதுரை:மதுரை, 'இதயம்' அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி சிவகுமார் உள்ளிட்டோர், குழந்தைகள் இறந்ததாக பெற்றோரிடம் கூறிவிட்டு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கிய இரண்டு தம்பதியர், புரோக்கராக செயல்பட்ட இருவர், ஆதரவற்றோர் இல்ல பொறுப்பாளர் கைது செய்யப்பட்டனர். இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லம், மதுரை ஆயுதப்படை மைதான
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
மதுரை:மதுரை, 'இதயம்' அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி சிவகுமார் உள்ளிட்டோர், குழந்தைகள் இறந்ததாக பெற்றோரிடம் கூறிவிட்டு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கிய இரண்டு தம்பதியர், புரோக்கராக செயல்பட்ட இருவர், ஆதரவற்றோர் இல்ல பொறுப்பாளர் கைது செய்யப்பட்டனர்.
இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லம், மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் செயல்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோரை இங்கு பராமரித்து வந்தனர்.இங்கு 1 வயது ஆண் குழந்தை மாணிக்கத்துடன் ஐஸ்வர்யாவும், 2 வயது மகள் தனத்துடன் பெங்களூரு ஸ்ரீதேவியும் தங்கியிருந்தனர்.
மாணிக்கத்திற்கு உடல்நிலை பாதித்ததாக கூறி இல்ல உரிமையாளர் சிவகுமார், 40; ஆண் ஊழியர் மதர்ஷா, 36, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடித்துள்ளனர். பின், 15 ஆண்டுகள் குழந்தை இல்லாத மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கண்ணன் தம்பதிக்கு 1.50 லட்சத்திற்கு, 100 ரூபாய் பத்திரம் எழுதி விற்றனர்.
'சட்டப்படி தத்து கொடுக்க வேண்டும்' என கண்ணன் கேட்டதற்கு, 'இரண்டு மாதத்தில் அதற்கான ஏற்பாட்டை செய்கிறோம்' என சமாளித்துஉள்ளனர். மேலும், குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். குழந்தையை விற்க, புரோக்கராக இருந்தவர் முத்துப்பட்டி ராஜா, 36. இவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடிநீர் கேன் சப்ளை செய்தவர். இவர் வழியாகத்தான் குழந்தை கை மாறியுள்ளது. இதற்கு கமிஷனாக ராஜா 50 ஆயிரம் ரூபாய் பெற்றார்.
1 மாதம் கண்காணிப்போம்
இதற்கிடையே, தன் குழந்தை குறித்து கேட்ட ஐஸ்வர்யாவிடம், கொரோனாவால் இறந்து விட்டதாக கூறி, தத்தனேரி சுடுகாட்டிற்கு மதர்ஷா அழைத்துச் சென்று, வேறு ஒரு குழந்தையை புதைத்த இடத்தில் இறுதிச் சடங்கு செய்ய வைத்தார். இதற்காக போலி மின் மயான ரசீது, சிகிச்சை பெற்றதற்கான ரசீது போன்றவற்றை சிவகுமாரும், மதர்ஷாவும் தயாரித்துஉள்ளனர். இவ்வழக்கில் இருவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கண்ணன், அவரது மனைவி, ராஜா ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், சக்கிமங்கலம் எல்.கே.டி., நகர் பட்டறை தொழிலாளி சகுபர் சாதிக் - ராணி தம்பதிக்கு ஸ்ரீதேவியின் மகளை விற்றுள்ளனர்.இதற்கு பாலமாக இருந்தவர் சொக்கநாதபுரம் செல்வி, 43. இவர் இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர். கலெக்டர் அலுவலகத்தில், தினக்கூலியாக இருந்தவர். ஆதரவற்றோரை இதயம் இல்லத்தில் அடிக்கடி சேர்த்து வந்ததால், சிவகுமாருடன் அறிமுகம் ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்திற்கு அவ்வப்போது சொந்த விஷயமாக வந்த ராணியுடன் செல்விக்கு அறிமுகம் ஏற்பட்டது. குழந்தை இல்லை என்பதை அறிந்து, சிவகுமாரை அறிமுகப்படுத்தி உள்ளார்.குழந்தை தனத்தை காண்பித்த சிவகுமார், 'இக்குழந்தையை வளர்க்க முடியாமல் அவர் தாயார் விட்டுச் சென்று விட்டார். ஒரு மாதம் வரை குழந்தையை வளர்த்து வாருங்கள். 'நீங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை கண்காணித்து குழந்தையை உங்களிடமே கொடுத்து விடுகிறோம்' என தெரிவித்துள்ளார்.
'சூப்பர்' என பாராட்டு ஜூன் 16ல் குழந்தையை ராணியிடம் கொடுத்துள்ளார். அப்போது பணம் ஏதும் பெறவில்லை. தினமும் குழந்தையை அழகுபடுத்துவது உட்பட அதன் செயல்பாடுகளை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் சிவகுமாருக்கு ராணி அனுப்பியுள்ளார். 'சூப்பர்' என பாராட்டு தெரிவித்த சிவகுமார், ஒரு வாரத்தில் ராணியை சந்தித்து இல்லத்திற்கு முன், 'ஷெட்' போட வேண்டும். குழந்தையின் தாய்க்கு உதவ வேண்டும். அதற்கு 50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்' எனக் கேட்டுஉள்ளார்.
அந்த தொகையை சில நாட்களுக்கு முன்தான் சிவகுமாரிடம் ராணி கொடுத்த நிலையில் தான், இவ்வழக்கில் சாதிக், ராணி கைது செய்யப்பட்டனர்.
83 பேர் இறப்பிலும் சந்தேகம்
இவை எல்லாம், இல்ல ஒருங்கிணைப்பாளராக இருந்த கலைவாணி, 33 என்பவருக்கு தெரியும். அவர் கொடுத்த தகவலின்படி தான் குழந்தைகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். குழந்தைகளை விற்றதற்கு உடந்தையாக இருந்ததாக அவரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, ஆதரவற்றோர் இல்லத்தில் இதுவரை 83 பேர் இறந்துஉள்ளனர். இதில் ஏதுமà

Related Keywords

India , Pudukkottai , Tamil Nadu , Alaska , United States , Anand Sinha , Sadiq Queen , Service Do , Collector Office , Foundation Sivakumar , Madurai Armed , Foundation Start , Madurai Armed Forces , Bangalore Sridevi , India Red Cross , Queen Sent , இந்தியா , புதுக்கோட்டை , தமிழ் நாடு , அலாஸ்கா , ஒன்றுபட்டது மாநிலங்களில் , ஆனந்த் சீன்ஹா , சேவை செய் , ஆட்சியர் அலுவலகம் , இந்தியா சிவப்பு குறுக்கு ,

© 2025 Vimarsana