வருகிறது &#x

வருகிறது பொது சிவில் சட்டம்! என்ன சொல்கின்றனர் இஸ்லாமியர்கள்?


Advertisement
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆக., 5ல், அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. இப்படி தகவல் பரவியதுமே, பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆக., 5ல், அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. இப்படி தகவல் பரவியதுமே, பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து மோதல்கள் துவங்கி இருக்கின்றன. இரு தரப்பு கருத்துக்கள் வருமாறு:
பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச்செயலர் - பொறுப்பு, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்:
'யூனிபார்ம் சிவில் கோடு' என்று சொன்னால், பொது சிவில் சட்டம் என, மொழி பெயர்த்து சொல்கின்றனர். அது தவறு. ஒரே மாதிரியான குடிமை சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.இந்திய அரசியல் சட்டத்திலேயே, ஒரே மாதிரியான குடிமை சட்டம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது என்பர். அதே இந்திய அரசியல் சட்டத்தின், வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று, பார்க்க வேண்டும். மேலும், 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு, கட்டாய கல்வி கொடுக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்; அதை செய்து விட்டோம் என, மோடி அரசால் சொல்ல முடியுமா? அதேபோல, பூரண மதுவிலக்கை, மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், அதே வழிகாட்டு நெறிமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா?அரசியல் சட்டத்தின் படி, அதில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தைத் தான் செய்கிறோம் என்று சொன்னால், மேற்சொன்னவற்றையும் செய்திருக்க வேண்டுமா இல்லையா?
இப்படி செய்யப்படாத விஷயங்கள், எத்தனையோ உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு, எப்போதெல்லாம் மத்திய அரசுக்கு சிக்கல்கள் வருகிறதோ, உடனே, அதை திசை திருப்புவதற்காக, இப்படிப்பட்ட பிரச்னைகளை கையில் எடுக்கின்றனர்.'தன் ஆட்சி அதிகாரத்துக்குள் வாழும் சிறுபான்மையின மக்களை பீதிக்குள்ளாக்கும் அரசை, மன நலம் குன்றிய அரசாகத்தான் கூறுவேன்' என, இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அப்படி பார்க்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக, மோடி அரசு சொல்லுமானால், அம்பேத்கர் கூற்றுப்படி, மோடி அரசு மனம் நலம் குன்றிய அரசு தான். தண்டனைமுஸ்லிம்களை குறிவைத்து தான், இந்த சட்டத்தையே அமல்படுத்த நினைக்கின்றனர்.
திருமணம், மணவிலக்கு, பாகப் பிரிவினை, வக்பு சொத்துக்கள் நிர்வாகம் உள்ளிட்ட, நான்கு பிரதான விஷயங்களில் மட்டுமே, முஸ்லிம்களுக்கு தனித்த சுதந்திரம் இருக்கிறது. இவை எல்லாமே, முஸ்லிம் மதத்துக்குள்ளேயே பேசி முடிக்கக் கூடியவை. வேற்று மதத்தவர், இந்த சம்பிரதாய, சடங்குக்குள் வரவே மாட்டார்கள். அதனால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும் போது, முஸ்லிம்களுக்கு மட்டும், இந்த நாட்டில் தனித்த உரிமைகளும், அதிகாரமும் இருப்பது போலவும், அதை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என, நினைப்பதே தவறு. மற்றபடி, இந்திய தண்டனைவியல் சட்டத்தின் படி, முஸ்லிம்களுக்கு ஒரு தண்டனையோ, பிற மதத்ததவர்களுக்கு கூடுதல் தண்டனையோ இல்லை. வாடகைதாரர் சட்டம், வங்கி பணபரிவர்த்தனை தொடர்பான பிரச்னைகள் என, எல்லாமே மற்ற மதத்தவருக்கு என்ன விதிகளோ, சட்டமோ, அதே தான் முஸ்லிம்களுக்கும்.
மோடி அரசு, தேவைஇல்லாமல் முஸ்லிம்களை சட்டத்தின் துணை கொண்டு நசுக்க, பல்வேறு முயற்சிகளை ஏழு ஆண்டுகளாக எடுக்கிறது.இப்படித்தான், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் என்று, ஒன்றைக் கொண்டு வந்து, முஸ்லிம்களை அழிக்க நினைத்தனர். ஆனால், என்ன நடந்தது? உலகம் முழுதும் இதை மக்கள் கண்டித்தனர். இந்தியாவிலும் மக்கள் விழித்துக் கொண்டு, பெரும் போராட்டம் நடத்தினர். இப்ப என்னாச்சு? அப்படித்தான், பொது சிவில் சட்ட அறிவிப்பும் இருக்கும். மக்கள் முன்னர் போல் இல்லை. எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். கெட்ட எண்ணத்தோடு மோடி அரசு, எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அது கிடப்புக்குத் தான் போகும்.
பாத்திமா அலி, மாநில தலைவர், முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச்:
மத்திய அரசின் முயற்சியை வரவேற்கிறேன். ஒரே நாட்டில், ஆளுக்கொரு சட்டம் இருக்à

Related Keywords

India , Spain , New Delhi , Delhi , Spanish , Fatima Ali , Muslim Rashtriya , Hc Muslim Progress Corporation , General Civil Law , India General Civil Act , General Civil Act , Central Government , General Secretary , Progress Corporation , Civic Law , Fact Step , Government Problems , Modi Government , Act Sub , Amendment Law , General Civil , Islamic Act , Live Muslim , India Muslims , இந்தியா , ஸ்பெயின் , புதியது டெல்ஹி , டெல்ஹி , ஸ்பானிஷ் , பாத்திமா அலி , முஸ்லீம் ரஷ்ற்ரிய , ஜநரல் சிவில் நாடகம் , மைய அரசு , ஜநரல் செயலாளர் , ப்ரோக்ரெஸ் நிறுவனம் , மோடி அரசு , திருத்தம் சட்டம் , ஜநரல் சிவில் , இந்தியா முஸ்லீம்கள் ,

© 2025 Vimarsana