தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை (Rain) பெய்து வருகிறது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதற்கிடையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் (Tamil Nadu) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் வரும் ஜூலை 18ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!