Online application registration for engineering courses has

Online application registration for engineering courses has started in Tamil Nadu | பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது


தமிழகத்தில் 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித் துறை கடந்த 19 ஆம் தேதி வெளியிட்டது. தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi)  செய்தியாளர்களை சந்தித்து பிளஸ் 2 வகுப்பு முடிவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது பி.இ., பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் (Engineering) சேர்வதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது
* www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். 
* மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. அத்துடன் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இதேபோல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்திலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் வருகிற 10 ஆம் தேதி வரை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம், கலந்தாய்வு என அனைத்தையும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Related Keywords

Hindustan , India General , India , , Advertising College , Polytechnic College , Engineering College , Twitter , Facebook , Hc School Education , Engineeringm Phil , August Yes , Higher Education , September Yes , Engineering Conference , October Yes , Accessories Conference Place , Education Drive October , ஹிந்துஸ்தான் , இந்தியா , பாலிடெக்நிக் கல்லூரி , பொறியியல் கல்லூரி , ட்விட்டர் , முகநூல் , அதிக கல்வி , பொறியியல் மாநாடு ,

© 2025 Vimarsana