தீக்கதிர

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி


ஊடக உலகில் உண்மையின் பேரொளி
 
Aritcle
7/25/2021 12:00:00 AM
இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறான் ”பெகாசஸ்” எனும் டிஜிட்டல்ஒற்றன்.  அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உளவுச் செயலியின் செயல்பாடு மிக மிக துல்லியமானதாகவும், உளவு செயலிகளை கண்டறிய பயன்படுத்தப்படும் பிற செயலிகளாலும் கண்டறிய முடியாததாகவும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 
உளவு பார்க்கப்பட வேண்டிய நபர் ஒருவரின்திறன்பேசிக்கு ஒரு குறுந்தகவலோ அல்லது வாட்ஸ் ஆப் காணொலி அழைப்போ வரும்போது, அத்தகைய செய்தியையோ அல்லதுஅழைப்பையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் கூட அவரது அலைபேசியில், ஜீரோ கிளிக் (‘‘ZERO CLICK”) முறையில் அதாவதுஅவரது ஒப்புதல் இல்லாமலேயே பெகாசஸ் உளவு செயலி என்பது பதிவிறக்கம் ஆகுமளவிற்கான அதிநவீனமான தொழில்நுட்பத்தை கொண்டதாக இது இருக்கிறது. 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் இதை மிக எளிதாக செலுத்தி விட முடியும். ஆப்பிள் போனில் உள்ள ‘‘ஐ மெசேஜ்” எனும் குறுந்தகவல் மூலமோ, இதர போன்களில் உள்ள சாதாரண குறுஞ்செய்திகளின் மூலமோ இதை அனுப்பி விட முடியும். இப்படியான ஒரு உளவுச் செயலி ஒருவருடைய போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என கண்டறியாத வகையில், தொலைபேசியில் உள்ள Temporary Storage ல் தான் (தற்காலிக சேமிப்பு) இது பதிவிறக்கம் ஆகும்.
வலையில் சிக்காத செயலி
ஆப்பிள் போனில் உள்ள ஐஒஎஸ் (IOS) (ஐபோன் ஆபரேட்டிங் சிஸ்டம்), , இதர தொலைபேசிகளில் செயல்படும் ஏஒஎஸ் (AOS) (ஆண்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம்) ஆகிய இருமுறைகளுக்கு பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு உளவுச் செயலி ஒருவரது தொலைபேசியிலோ அல்லது மொபைல் போனிலோ செலுத்தப்பட்டுள்ளதா என்பதை இதர செயலிகள் மூலம்  கண்டறிய முடியும். ஆனால்  பெகாசஸ் உளவு செயலியை கண்டுபிடிக்க முடியாத வகையில் நுட்பமானதாக இருக்கிறது.
உதாரணமாக பீமா கொரேகான் குற்றம், சாட்டப்பட்டவர்களின் கணினி மற்றும் தொலைபேசிகளில் “நெட்வயர்” எனும் உளவுச் செயலி ரகசியமாக செலுத்தப்பட்டது. அதன் மூலம் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் அனுப்பியது போலவே சில போலியான மின்னஞ்சல்களும் அனுப்பட்டு, அவற்றை ஆதாரமாக கொண்டே அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். அத்தகையதொரு உளவுச் செயலிஅவர்களிடைய மின் சாதனங்களில் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பின்னர்  ”மெக்ஆஃபி” எனும் மற்றொரு செயலி மூலம் கண்டறிய முடிந்தது. ஆனால் பெகாசஸ் எனும் செயலியை அப்படி எந்த வகையிலும் கண்டறிய முடியாது. ஒருவருடைய மொபைல் போனில் பெகாசஸ் உளவுச் செயலி செலுத்தப்பட்டு விட்டால், அவரது குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், வாட்ஸ் ஆப் உரையாடல்கள், வீடியோக்கள், படங்கள் என அனைத்தையும் பார்க்கவும், பதிவு செய்து கொள்ளவும் முடியும். மேலும் மொபைல் போனில் உள்ள மைக்ரோ போனையும், கேமராவையும் தானாகவே இயங்க வைத்து, அவரது உரையாடல்கள் அனைத்தையும் பதிவு செய்ய முடியும். அவரது அன்றாட நிகழ்ச்சிகள் என்ன,அவர் எங்கெல்லாம் பயணிக்கிறார், அவரோடு தொடர்பில் இருப்பவர்கள் யார் என்ற அனைத்து விபரங்களையும் முழுமையாகப் பெற்றுவிட முடியும். 
செயற்கைத் தரவுகளை செலுத்திட முடியும்
ஒருவர் பிறருக்கு அனுப்பாத அல்லது அவருக்கு வராத ஒரு தகவலையோ, புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ அவர்அனுப்பிய மாதிரியோ அல்லது அவருக்கு வந்ததுமாதிரியோ செயற்கையாக தரவுகளை உருவாக்கவும் முடியும். இத்தகைய ஆதாரங்களை காட்டி வழக்குகளையும் ஒருவருக்கு எதிராக வழக்குகளையும் பதிவு செய்ய இந்த உளவு செயலி உதவுகிறது.இத்தகைய அதிநவீனமான உளவுச் செயலியை உருவாக்கிய என்.எஸ்.ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனம் உலகில் வளர்ந்து வரும் தீவிரவாத அபாயத்தை கட்டுப்படுத்துவதற்கும், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்குமே இதை நாங்கள் தயாரித்திருக்கிறோம் என சொல்வதோடு, இதை அரசாங்கங்களுக்கு மட்டுமே நாங்கள் வழங்குகிறோமேயன்றி எந்தவொரு தனியாருக்கும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கிறது. ஆனால் இந்த உளவுச் செயலி உலகம் முழுவதும் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது எனவும் ஐம்பதாயிரம் பேருக்கும் அதிகமானோரை உளவு பார்க்க பயன்படுத்தப்படுகிறது எனவும்ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளும் மறுபுறத்தில்முன்வைக்கப்படுகின்றன.
நம்பும்படி இல்லை
இந்த உளவுச் செயலியின் மூலம் கண்காணிக்கப்படும் முக்கியமான நபர்கள் பட்டியலில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தென்னாபிரிக்க அதிபர் சிறில் ராமபோசா, இராக் அதிபர் பஹ்ராம் சாஹ்லி உள்ளிட்ட பலரும்உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் இவர்களை எல்லாம் ஏன் உளவு வளையத்திற்கு கொண்டுவர வேண்டும்? மேலும் தீவிரவாதிகள் யாரும் ஸ்மார்ட் போன்களையோ, அல்லது ஒரே போனையோ பயன்படுத்துவதில்லை. அவர்கள் பெரும்பாலும் சாட்டிலைட் போன்களைத்தான் பயன்படுத்துகிறார்கள் எனும் போது என்.எஸ்.ஓ நிறுவனம் சொல்வது நம்பும்படியாக இல்லை எனவும் வலுவான எதிர்வினை எழுகிறது. இந்தியாவிலும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசுக்கெதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் என சுமார் முன்னூறு பேர் வரைக்கும் இந்தச் செயலியின் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன. 
வரலாற்றில் எப்போதுமே ‘‘அரசு” என்பது தனதுவர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், தனக்கு எதிரானவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், குற்றச்சாட்டுகள் மூலம் அவர்களை தண்டிப்பதற்குமான ஒருநடவடிக்கையாகவே உளவையும், ஒற்றன்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறது. நவீன தாராளமயச் சூழலில் ஒற்றன் என்பவன் டிஜிட்டல் வடிவில்நடமாடத் துவங்கியிருக்கிறான். ஆனால் நோக்கம்மட்டும் மாறாமல் அப்படியே தொடர்கிறது.
கட்டுரையாளர் : ஆர்.பத்ரி, ஊட்டி 

Related Keywords

South Africa , Iraq , India , France , Israel , Bhima , Punjab , Pakistan , Imran Khan , , Phone System , Her Daily , Create Can , France Chancellor Immanuel , South Africa Chancellor , Iraq Chancellor , இராக் , இந்தியா , பிரான்ஸ் , இஸ்ரேல் , பீமா , பஞ்சாப் , பாக்கிஸ்தான் , இம்ரான் காந் , தொலைபேசி அமைப்பு , அவள் தினசரி ,

© 2025 Vimarsana