TN Lockdown: Additional relaxations in Tamil Nadu from today

TN Lockdown: Additional relaxations in Tamil Nadu from today; what will be allowed | தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள்; எவையெல்லாம் இயங்கும்


சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகின்றது. பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் ஊரடங்கால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 
தமிழகத்தில் (Tamil Nadu) தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்குகளில் (TN Lockdown) பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று வரை அமலில் இருந்த ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களும் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு, தொற்று எண்ணிக்கைக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டது. 
வகை 1- மாவட்டங்கள் (11)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.
வகை 2- மாவட்டங்கள் (23)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3- (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
வகை 2 மற்றும் 3ல் என்ன அனுமதி
வகை 3ல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 9,333 அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வகை 3ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு வணிக வளாகங்களை திறக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே, திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. 
வகை 1ல் என்ன அனுமதி
வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அளிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடனும் இயங்கலாம்
அரசு பூங்காக்கள், விளையாட்டு திடல்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் திறக்க அனுமதி. மேலும் மின்பொருட்கள், கல்வி புத்தகங்கள், பாத்திர கடைகள், செல்போன் கடைகள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Keywords

Tiruvannamalai , Tamil Nadu , India , Thiruvarur , Dindigul , Trichy , Tenkasi , Krishnagiri , Andhra Pradesh , Kanya Kumari , Cuddalore , Tuticorin , Nilgiris , Pudukkottai , Sivaganga , Karnataka , Ramanathapuram , Madras , Hindustan , India General , Tirunelveli , Tirupur , Namakkal , Thanjavur , Kanchipuram , Dharmapuri , Nagapattinam , Karur , Ariyalur , Tiruvallur , Vellore , Villupuram , Nadua Nalin , , Twitter , Facebook , Education Books , திருவண்ணாமலை , தமிழ் நாடு , இந்தியா , திருவாரூர் , திந்டிகுள் , திருச்சி , தென்காசி , கிருஷ்ணகிரி , ஆந்திரா பிரதேஷ் , கன்யா குமாரி , குடலூர் , தூத்துக்குடி , நீலகிரி , புதுக்கோட்டை , சிவகங்க , கர்நாடகா , ரமநாதபுரம் , மெட்ராஸ் , ஹிந்துஸ்தான் , திருநெல்வேலி , திருப்பூர் , நமக்கல் , தஞ்சாவூர் , காஞ்சிபுரம் , தர்மபுரி , நாகப்பட்டினம் , கரூர் , அரியலூர் , திருவள்ளூர் , வேலூர் , வில்லுபுரம் , ட்விட்டர் , முகநூல் , கல்வி புத்தகங்கள் ,

© 2025 Vimarsana