Vivo V21e launched: Price, specifications, and more | Vivo V

Vivo V21e launched: Price, specifications, and more | Vivo V21e: அசத்தலான அம்சங்களுடன் Vivo V21e ஸ்மார்ட்போன் அறிமுகம்


Vivo நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Vivo V21e விவோ வி 21 சீரிஸ்  போர்ட்ஃபோலியோவின் நீட்டிப்பாகும். விவோ வி 21 இன் பாரம்பரியத்தை முன்னிட்டு, வி 21 ஈ மெலிதானதாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது, மேலும் நேர்த்தியான வடிவமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சன்செட் ஜாஸ் மற்றும் டார்க் பேர்ல் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது.
Vivo V21e 5ஜி ஸ்மார்ட்போன் (Vivo Smartphone) 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 32 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 64MP பிரைமரி கேமரா, 8MP வைட் ஆங்கில் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
டூயல் சிம் ஸ்லாட், விவோ V21e 5ஜி இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய Vivo V21e 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,990 ஆகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Keywords

Hindustan , India General , India , , Twitter , Facebook , Commercial Android , Vivo , Vivo V21e , Ivo V21e Specifications , Ivo V21e Features , Ivo V21e Price , Ivo V21e Launch , Ivo V21e Availability , ஹிந்துஸ்தான் , இந்தியா , ட்விட்டர் , முகநூல் , விவோ ,

© 2025 Vimarsana