vimarsana.com


 
Advertisement
புதுடில்லி: 'இந்தியக் குடியுரிமை பெற்றவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இடையேயான ஓரினத் திருமணம் செல்லுபடியாகுமா; அவருக்கு இந்தியக்குடியுரிமை வழங்க முடியுமா' என, பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அங்கீகரிப்புஓரினத் திருமணத்துக்கு நம் நாட்டு சட்டங்கள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்திய சட்டங்களின்படி,
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
புதுடில்லி: 'இந்தியக் குடியுரிமை பெற்றவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இடையேயான ஓரினத் திருமணம் செல்லுபடியாகுமா; அவருக்கு இந்தியக்குடியுரிமை வழங்க முடியுமா' என, பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிப்பு
ஓரினத் திருமணத்துக்கு நம் நாட்டு சட்டங்கள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்திய சட்டங்களின்படி, தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோரி ஓரினச் சேர்க்கையாளர்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் பணியாற்றும், ஓ.சி.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர் அந்தஸ்து பெற்றுள்ள ஜாய்தீப் சென்குப்தா, அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் பிளைன் ஸ்டீபன்ஸ், ஓரினத் திருமணம் செய்துள்ளனர்.
தற்போது ஸ்டீபன்ஸ்க்கு, ஓ.சி.ஐ., அந்தஸ்து அளிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 20 ஆண்டுகளாக பழகி வந்த சென்குப்தா மற்றும் ஸ்டீபன்ஸ்,ஓரினத் திருமணம் செய்துள்ளனர். அந்தத் திருமணத்தை அமெரிக்க சட்டம் அங்கீகரித்துள்ளது.தற்போது தங்கள் முதல் குழந்தை பிறப்பதற்காக இவர்கள் காத்திருக்கின்றனர்.
'நோட்டீஸ்'
வெளிநாட்டவர் திருமண சட்டத்தின்படி, இந்தத் திருமணத்தை இந்திய சட்டம் ஏற்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பாலினம், பாலின உறவு பேதமில்லாமல் இந்தத் திருமணத்தை ஏற்க வேண்டும். இதை தனி மனித உரிமையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகபதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியத் துாதரகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

New York ,United States ,India ,Spain ,New Delhi ,Delhi ,Spanish ,Statesa Russell Stephens , ,Government New Delhi ,Russell Stephens ,India Law ,Central Government ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,இந்தியா ,ஸ்பெயின் ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,ஸ்பானிஷ் ,ரஸ்ஸல் ஸ்டீபன்ஸ் ,இந்தியா சட்டம் ,மைய அரசு ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.