புதுடெல்லி: இந்தியா திங்களன்று (ஜூலை 5, 2021) பல்வேறு நாடுகளின் சுகாதார மற்றும் தொழில்நுட்ப களங்களின் பிரதிநிதிகளின் மெய்நிகர் உலகளாவிய மாநாட்டில், அதன் கோவிட் -19 தடுப்பூசி தளமான கோ-வின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும். பிரதம மந்திரி நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அரசு, தங்கள் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிர்வகிப்பதற்கான தளத்தை பயன்படுத்த விரும்பும் நாட்டிற்கு கோ-வின் தளத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தளமான Co-Win செயலி உலகளவில் பகிர்ந்து கொள்ளப்படும் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ள கோ-வின் குளோபல் மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைக்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலக அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல் வெளியாகியுள்ளது இந்த மெய்நிகர் மாநாட்டில், கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகளின் சுகாதார மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். கோ-வின் அல்லது அதன் அம்சங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் அல்லது உரிமக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது COVID-19 தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிடல், செயல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான க்ளொட் கம்யூடிங் வகையை சார்ந்த தளமான கோ-வின், தளத்தில் தடுப்பூசி பெறுவதற்கான புக்கிங் செய்தல், தடுப்பூசி சான் றிதழ் பெறுதல் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது. கோ-வின் அமைப்பு பல்வேறு நிலைகளில் தடுப்பூசி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு அரசு மற்றும் பொது மக்கள் இருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, பயனாளிகள் தடுப்பூசிக்காக பதிவு செய்தல், திட்டமிடல் மற்றும் தடுப்பூசி செயல்முறையின் மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதிக்கிறது. டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட COVID-19 தடுப்பூசி சான்றிதழ்களை வழங்குவதும் இதில் அடங்கும். இன்றுவரை, கோ-வின் டிஜிட்டல் தளங்களில் 36 கோடிக்கும் அதிகமான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.