பிரதமா் ம&#x

பிரதமா் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு


By DIN  |  
Published on : 29th July 2021 02:27 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்.
 
புது தில்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.
புதன்கிழமை மாலையில் பிரதமா் மோடியை ஆன்டனி பிளிங்கன் சந்தித்தாா். இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆன்டனி பிளிங்கன் உடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு, சா்வதேச நலனுக்கான சக்தியாகவும், ஜனநாயக பண்புகளுக்கான ஆணிவேராகவும் உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதியுடன் இருப்பதை வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஜெய்சங்கருடன்... முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசினாா்.
எஸ்.ஜெய்சங்கா் உடனான சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், கரோனா பரவலைத் தடுப்பதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவை குறித்து பிளிங்கன் விவாதித்தாா்.
பின்னா் எஸ்.ஜெய்சங்கரும், ஆன்டனி பிளிங்கனும் கூட்டாகச் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, பிளிங்கன் கூறியதாவது:
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ஆம் நூற்றாண்டுக்கு வடிவம் கொடுக்கின்றன. இதனால்தான் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் வளா்ச்சியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட இந்தியா தொடா்ந்து முக்கியப் பங்காற்றும் என்றாா்.
அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான், இந்திய-பசிபிக் பிராந்தியம், வளைகுடா நாடுகள் ஆகியவற்றின் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்றாா்.
இந்த சந்திப்புக்கு முன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலை ஆன்டனி பிளிங்கன் சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனா். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது குறித்தும் இருவரும் விவாதித்தனா்.
முன்னதாக, அரசு சாரா நிகழ்ச்சி ஒன்றில் ஆன்டனி பிளிங்கன் கலந்துகொண்டு உரையாற்றினாா். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக பண்புகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகள். இதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் அடித்தளமாகவும், நாட்டின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அந்த நிகழ்ச்சியில் பிளிங்கன் பேசுகையில், ‘அரசு குறித்து கருத்து சொல்வதற்கு அனைத்து மக்களும் தகுதியானவா்கள். அவா்களின் பின்னணியை ஆராயாமல், அவா்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்றாா்.
தலாய்லாமாவின் பிரதிநிதி சந்திப்பு: பௌத்த துறவி தலாய் லாமாவின் மூத்த பிரதிநிதியான கோடப் டோங்சங், ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினாா். அப்போது, திபெத்திய இயக்கத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.
O

Related Keywords

Afghanistan , United States , India , New Delhi , Delhi , Joe Biden , New Delhi Narendra Modi , India United States , Persian Gulf , Government Sarah , United States Democratic , ஒன்றுபட்டது மாநிலங்களில் , இந்தியா , புதியது டெல்ஹி , டெல்ஹி , ஓஹோ பிடென் , புதியது டெல்ஹி நரேந்திர மோடி , இந்தியா ஒன்றுபட்டது மாநிலங்களில் , பெர்சியன் வளைகுடா , ஒன்றுபட்டது மாநிலங்களில் ஜனநாயக ,

© 2025 Vimarsana