Live Breaking News & Updates on Doctors toll

Stay updated with breaking news from Doctors toll. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.

IMA: COVID-19 second wave took 798 doctors lives in India; maximum loss Delhi | IMA on COVID-19 2nd wave: கோவிட் இரண்டாம் அலைக்கு 798 மருத்துவர்கள் பலி


புதுடெல்லி: கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து எப்போது வெளிவருவோம் என்று தெரியவில்லை. ஆனால், பலி எண்ணிக்கையும், இழப்பு எண்ணிக்கையும் அனைவரின் மனதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
COVID-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அதிகபட்சம் 128 மருத்துவர்கள் உயிர் இழந்தனர், பீகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79  பேர் கோவிடுக்கு பலியானதாக ஐ.எம்.ஏ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.   
டெல்டா பிளஸ் மாறுபாட்டின் பரவலான மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் COVID-19 இன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும், கேரளாவில் 24 இறப்புகளும் பதிவாகியுள்ளன. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே இறந்துள்ளார். இதுதான் மருத்துவர்களின் பலி எண்ணிக்கையில் மிகவும் குறைவு. 
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவி செய்த மருத்துவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாராட்டிப் பேசினார். மருத்துவர்கள் மதிக்கப்படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளதாக, ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் தேசிய மருத்துவ தினம் ஜூலை மாதம் முதல் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளில் இருந்து ஆண்டுதோறும் தேசிய மருத்துவர் தினம் நாட்டில் கொண்டாடப்படுகிறது.   
மூத்த டாக்டர் பி.சி.ராய் நினைவாக இந்த ஆண்டு தேசிய மருத்துவர்கள் தினம் (ஜூலை 1) கொண்டாடப்படுகிறது. மருத்துவர்கள் தினத்திற்கான மருத்துவ சகோதரத்துவத்தை பிரதமர் மோடி வாழ்த்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், "என்று ஐ.எம்.ஏ தலைவர் கூறினார்.
மருத்துவர்கள் உயிரிழப்பு பட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், டெல்லி அதிகபட்சமாக 128 மருத்துவர்களை இழந்தது. பீகார் 115 இறப்புகளைக் கண்டது, அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் 79, மேற்கு வங்கம் 62, ராஜஸ்தான் 44, ஜார்க்கண்ட் 39, மற்றும் ஆந்திரா 40.   பதிவாகியுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Uttar-pradesh , India , Bihar , New-delhi , Delhi , Pondicherry , E-keralaa-states , Twitter , Facebook , Pondicherry-union , India-medicare-association , India-doctors

கோவிட் 2வது அலைக்கு 719 மருத்துவர்கள் உயிரிழப்பு

கோவிட் 2வது அலைக்கு 719 மருத்துவர்கள் உயிரிழப்பு
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Doctors-toll ,

Indian Medical Association (IMA) says 594 doctors died during the second wave of COVID-19 || கொரோனா 2வது அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழப்பு

Indian Medical Association (IMA) says 594 doctors died during the second wave of COVID-19 || கொரோனா 2வது அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழப்பு
dailythanthi.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dailythanthi.com Daily Mail and Mail on Sunday newspapers.

United-states , India , New-delhi , Delhi , Doctors-toll , India-medicare , ஒன்றுபட்டது-மாநிலங்களில் , இந்தியா , புதியது-டெல்ஹி , டெல்ஹி ,

கும்பகோணம் : கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கும்பகோணம் : கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2 மருத்துவர்கள் உயிரிழப்பு!
vikatan.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from vikatan.com Daily Mail and Mail on Sunday newspapers.

Kumbakonam , Tamil-nadu , India , Department-of-health , Doctors-toll , கும்பகோணம் , தமிழ்-நாடு , இந்தியா , துறை-ஆஃப்-ஆரோக்கியம் ,

கொரோனா பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு : இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கொரோனா பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு : இந்திய மருத்துவ சங்கம் தகவல்
thinaboomi.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from thinaboomi.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Telangana , Andhra-pradesh , New-delhi , Delhi , India-medicare-association , Doctors-toll , Thaandavam-jul , இந்தியா , தெலுங்கானா , ஆந்திரா-பிரதேஷ்