மார்க்சி

மார்க்சிஸ்ட் கட்சி கொள்கைகளில் காங். கொள்கைகளை சேர்த்தது போல் இருக்கும்...


Advertisement
தமிழகத்தில் உள்ள, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழை பாட மொழியாக வைக்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளில், காங்., கொள்கையை சேர்த்தது போல இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
தமிழகத்தில் உள்ள, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழை பாட மொழியாக வைக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளில், காங்., கொள்கையை சேர்த்தது போல இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.
பட்டிமன்றம் என்ற போர்வையில், ஹிந்து மத கடவுளர்களையும், ஹிந்து மத பழக்க வழக்கத்தையும், ஹிந்து பெண்களையும் தொடர்ந்து இழிவாகப் பேசி வந்த பட்டிமன்ற பேச்சாளர் லியோனி என்ற நபரை, பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா
'அப்படி பேசி பேசி தானே, இந்த பதவியை பெற்றுள்ளார். படிப்பு, அந்தஸ்து படியா, இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது...' என, கேட்கத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா அறிக்கை.
'பா.ஜ.,வின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்' என்கிறார், பா.ஜ., தலைவர் அண்ணாமலை. நாட்டை கெடுத்தது போதாது என்று ஒவ்வொரு வீட்டையும் கெடுக்க வருகிறது மனுவாத மதவெறி.
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'நீங்கள் பேச பேச, ஏச ஏச, அண்ணாமலைக்கு வெற்றி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.
தமிழக கவர்னர் பன்வாரிலால் டில்லியில் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றோரை சந்தித்துள்ளார். கவர்னர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி என்றால், மாநில முதல்வருடன் கலந்தாலோசித்து தான், புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.
- தமிழக சிறுபான்மையின கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
'அப்போ, உங்கள் அலுவலகத்தில் ஒருவரை வேலைக்கு எடுக்க, பக்கத்து அலுவலகத்தின் தலைவரை அனுமதி கேட்பீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையின கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
கொங்கு நாடு என்ற சொல் கேட்டு யாரும் மிரள வேண் டாம். கொங்கு நாடு என்ற சொல்லில் சுவை உள்ளது. பயன்படுத்துகிறோம்,- பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.
- தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'ஒன்றியம் என்ற சர்ச்சைக்கு, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்த போது, சொன்னதையே நீங்களும் திருப்பி சொல்கிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
கொங்கு மண்டலத்தில் 2 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுவிட்டால் உடனே தனி மாநிலம் ஆக்கி விடுவரா? அப்போது, உத்தர பிரதேசத்தை பிரிக்க வேண்டியது தானே? அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஜெயித்த காரணத்தால் தனி மாநிலம் கேட்பது வேடிக்கையாக உள்ளது.
- தி.மு.க., - எம்.பி., இளங்கோவன்
'யார் கேட்டனர்; யார் கொடுத்தனர். நீங்களாகவே அலறுகிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் பேட்டி.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவதà

Related Keywords

New York , United States , New Delhi , Delhi , India , Kendriya Vidyalaya , Peter Alphonse , Kongu Nadu , Narayanan Tirupati , Your Office , Assembly Cm Stalin , Peter Alphonse Report , Narayanan Tirupati Report , Single New York , புதியது யார்க் , ஒன்றுபட்டது மாநிலங்களில் , புதியது டெல்ஹி , டெல்ஹி , இந்தியா , கென்ரிய வித்யாலயா , பீட்டர் அல்போன்ஸ் , கொங்கு நாடு , நாராயணன் திருப்பதி , உங்கள் அலுவலகம் ,

© 2025 Vimarsana