வட தமிழ்ந&#x

வட தமிழ்நாடு-கொங்கு நாடு-தென் தமிழ்நாடு:தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்கும் தனிமாநில கோரிக்கைகள்!|பகுதி-6 |North Tamil Nadu- Kongu Nadu- South Tamil Nadu: Separate state demands in Tamil Nadu | Part-6


29 Jul 2021 6 AM
வட தமிழ்நாடு-கொங்குநாடு-தென் தமிழ்நாடு:தமிழ்நாட்டை 3-ஆகப் பிரிக்கும் தனிமாநிலக் கோரிக்கைகள்!|பகுதி-6
வட தமிழ்நாடு-கொங்கு நாடு-தென் தமிழ்நாடு
அரசியலில் எப்போதும் நேரெதிராக இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும், தெலங்கானா பிரிவினை நடந்த காலகட்டத்தில் "தமிழ்நாடு மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒரே குரலாக ஓங்கி ஒலித்தனர்.
தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷம் இன்று நேற்று தொடங்கியது அல்ல, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே குறிப்பிட்ட சில சமூகம் சார்ந்த கட்சிகளால் அவ்வப்போது எழுப்பப்பட்டு பின்னர் தானாகவே அடங்கிவிடும். தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, கொங்கு நாடு, தென் தமிழ்நாடு என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி எழுந்தது, யாரால் எழுப்பப்பட்டது, அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன என்பதைப் பற்றி இந்த இறுதித் தொடரில் காண்போம்.
வட தமிழ்நாடு கோரிக்கை:
வடதமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கை, எழுபதுகளின் பிற்பகுதியிலேயே எழுப்பப்பட்டது. முதன்முதலில் இந்தக் கோரிக்கையை எழுப்பியது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சித் தலைவரும், வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவராகவும் அறியப்படும்
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், ``அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடதமிழகம் புறக்கணிக்கப்படுகிறது’’ என்று கூறிய இவர் 1976-ம் ஆண்டு, மார்ச் மாதம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மாநாடு ஒன்றை நடத்தி `
வன்னியர் மாநிலம்’ அல்லது `
வட தமிழ்நாடு’ கோரிக்கையை முன்வைத்தார். இந்த மாநாட்டை நடத்தியதற்காக அப்போதைய தமிழக அரசால் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் தனிமாநிலம் கோருவது சட்டப்படி குற்றமல்ல என்றும், கோரிக்கையை ஏற்பதும் மறுப்பதும் அரசின் முடிவுவைப் பொறுத்தது என்றும் கூறி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி உருவப்படம்
அதன் பிறகு நெடுங்காலமாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த வடதமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் கிளப்பினார் வன்னியர் சங்கத்திலிருந்து உருப்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
``வட தமிழகத்தில் அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது. மேலும், வடதமிழகத்தைச்சேர்ந்த ஒருவர்கூட இதுவரை முதல்வராக ஆக முடியவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்!ராமதாஸ், பா.ம.க
``வட தமிழகத்தில் அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது. மேலும், வடதமிழகத்தைச்சேர்ந்த ஒருவர்கூட இதுவரை முதல்வராக ஆக முடியவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்” என 2002-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் தீவிரமாகப் பேசினார் ராமதாஸ்.
ராமதாஸ்
Photo: Vikatan
மேலும், சென்னையைத் தலைநகராகக்கொண்டு, வட தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களைச் சேர்த்து 'வடதமிழ்நாடு' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
வட தமிழ்நாடு கோரிக்கை
ட்விட்டர்
இதைத் தொடர்ந்து, வடதமிழ்நாடு கூட்டியக்கம் எனும் பெயரில் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில தலைவர்கள் தனி 'வட தமிழ்நாடு' மாநிலம் கோரி சிறிய அளவிலான முன்னெடுப்புகளை நடத்திவருகின்றனர்.
உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!
Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
கொங்கு தமிழ்நாடு கோரிக்கை:
கொங்கு தமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கை, 90-களின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டது. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும், கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மூத்த தலைவராகவும் அறியப்படும்
கோவை செழியன், முதன்முதலில் 1994-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில மாநாட்டில் தனி '
கொங்கு மாநிலம்' அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அதற்கான காரணங்களையும் முன்வைத்தார்.
கோவை செழியன்
ட்விட்டர்
அதன் பிறகு, 2009-ம் ஆண்டு கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்திலிருந்து உருப்பெற்ற கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
பெஸ்ட் ராமசாமி, ``இதுவரையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தமிழகத்தà®

Related Keywords

New York , United States , Tirupur , Tamil Nadu , India , Namakkal , Dharmapuri , Dindigul , Krishnagiri , Andhra Pradesh , Trichy , Nilgiris , Villupuram , Kongu Vellalar , Best Ramasamy , Karura Kongu , Kongu Nadu , Committee Meeting , Progress League , Twitter , North Tamil Nadu , Kongu Tamil Nadu , Convention State , Single Kongu , Tuesday Progress League , Kongu Galaxy , Central State States , Best Ramasamy Single Kongu , Lord Best , Single State , Single New York , Erode Nilgiris , File District , File North District , Executive Committee Meeting , State Executive Committee , Central Government Tamil Nadu West Regional , France Tamil Nadu State , West New State , புதியது யார்க் , ஒன்றுபட்டது மாநிலங்களில் , திருப்பூர் , தமிழ் நாடு , இந்தியா , நமக்கல் , தர்மபுரி , திந்டிகுள் , கிருஷ்ணகிரி , ஆந்திரா பிரதேஷ் , திருச்சி , நீலகிரி , வில்லுபுரம் , கொங்கு வெல்லாளார் , கொங்கு நாடு , குழு சந்தித்தல் , ட்விட்டர் , வடக்கு தமிழ் நாடு , மாநாடு நிலை , ஆண்டவர் சிறந்தது , ஒற்றை நிலை , கோப்பு மாவட்டம் , நிர்வாகி குழு சந்தித்தல் , நிலை நிர்வாகி குழு ,

© 2025 Vimarsana